அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., வரலாற்றை திரும்பி பார்த்தால் தொழில்களை வளர்த்த கதை தெரியும்: பா.ஜ., பொருளாளர் சேகர் கிண்டல்

Added : செப் 24, 2021
Share
Advertisement
மதுரை:''தி.மு.க., வரலாற்றை திரும்பி பார்த்தால் அவர்கள் தொழில்களை வளர்த்த கதை தெரிய வரும்'' என பா.ஜ.,மாநில பொருளாளர் சேகர் கிண்டலடித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது: தமிழகத்தை உயர்த்துவோம் என முதல்வர் ஸ்டாலின் கூறுவதில் தவறில்லை. ஆனால் 'மேட் இன் இந்தியா'விற்கு நிகராக 'மேட் இன் தமிழகம்' என கூறுவது மாயாஜால வார்த்தை மட்டுமே.மற்ற மாநிலங்களுக்கு இடையே போட்டி

மதுரை:''தி.மு.க., வரலாற்றை திரும்பி பார்த்தால் அவர்கள் தொழில்களை வளர்த்த கதை தெரிய வரும்'' என பா.ஜ.,மாநில பொருளாளர் சேகர் கிண்டலடித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது: தமிழகத்தை உயர்த்துவோம் என முதல்வர் ஸ்டாலின் கூறுவதில் தவறில்லை. ஆனால் 'மேட் இன் இந்தியா'விற்கு நிகராக 'மேட் இன் தமிழகம்' என கூறுவது மாயாஜால வார்த்தை மட்டுமே.மற்ற மாநிலங்களுக்கு இடையே போட்டி இருக்கலாம். ஆனால் ஒரு மாநிலம் நாட்டையே தனக்கு நிகராக போட்டியாளராக கருதுவது பிதற்றல்.

உள்நாட்டிலேயே மிகச்சிறப்பாக வாகனங்களை தயாரித்த ஸ்டாண்டர்ட் மேட்டார்ஸ் தி.மு.க., ஆட்சியில் தான் மூடப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர். தி.மு.க., தொழிற்சங்க ஆதிக்கத்திற்கு எதிராக நிற்க முடியாமல் சிம்ஸன் நிர்வாகம் தொழிற்சாலையை இடம் மாற்றியது.

தி.மு.க., தொழிற்சங்க போராட்டத்தால் பின்னி மில் மூடப்பட்டது. கோவையில் பலஆயிரம் பவுண்டரிகள் தி.மு.க., ஆட்சியில் நிலவிய மின்வெட்டால் மூடப்பட்டன.பல தொழிற்சாலைகள் தமிழகத்தில் முதலீடு செய்ய மறுத்து மற்ற மாநிலங்களுக்கு செல்கின்றன. வளர்ச்சி திட்டங்கள் அனைத்தையும் எதிர்த்து விட்டு தொழில் முன்னேற்றம் என பேசுவது மக்களை ஏமாற்றுவதாகும்.

நக்சல், பிரிவினைவாதம், தீவிரவாதம் போன்றவற்றை ஆதரிப்பவர்களை அருகில் வைத்து கொண்டு விடியல், வளர்ச்சி என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X