கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கடலில் எண்ணெய் கசிவு பேரிடர் குழு அமைக்க வழக்கு அரசிடம் பதில் கோரும் உயர்நீதிமன்றம்

Added : செப் 24, 2021
Share
Advertisement
மதுரை:கடலில் கப்பல் விபத்திற்குள்ளாகி எண்ணெய் கசிவு ஏற்படும்போது அதை கையாள பேரிடர் மேலாண்மைக் குழு அமைக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.ராமநாதபுரம் மோர்ப்பண்ணை வழக்கறிஞர் திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: இலங்கை கடற்பகுதியில் சிங்கப்பூர் எண்ணெய் கப்பல் விபத்திற்குள்ளானது. இதனால் இலங்கை மட்டுமன்றி

மதுரை:கடலில் கப்பல் விபத்திற்குள்ளாகி எண்ணெய் கசிவு ஏற்படும்போது அதை கையாள பேரிடர் மேலாண்மைக் குழு அமைக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மோர்ப்பண்ணை வழக்கறிஞர் திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: இலங்கை கடற்பகுதியில் சிங்கப்பூர் எண்ணெய் கப்பல் விபத்திற்குள்ளானது. இதனால் இலங்கை மட்டுமன்றி ராமேஸ்வரம், மன்னார் வளைகுடா, கன்னியாகுமரி கடல்வளமும் பாதிக்கும். கேரளாவில் ஒரு கம்பெனியின் எண்ணெய் கழிவுகளை கடலில் கலக்கவிட்டனர். இது தமிழக கடல் எல்லை அருகே நடந்துள்ளது.

சென்னை எண்ணுார் துறைமுகத்தில் 2 கப்பல்கள் மோதிக் கொண்டதில், கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இவற்றால் கடலின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற அவசர காலங்களில் நிலைமையை சமாளிக்க செயல்திட்டங்களை கோவா, கர்நாடக அரசுகள் வகுத்துள்ளன. தமிழகத்தில் அதுபோன்ற திட்டம் இல்லை. எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அவற்றை கையாள பேரிடர் மேலாண்மைக் குழுக்களை தமிழகத்தில் அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.

நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு மாநில சுற்றுச்சூழல்துறை இயக்குனர், பேரிடர் மேலாண்மை ஆணைய கமிஷனர், தமிழ்நாடு கடல்சார் வாரிய தலைமை செயல் அதிகாரி ஆகியோர் நவ.,9ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X