இந்தியா

ஜார்க்கண்ட் நீதிபதி இறந்தது எப்படி?சி.பி.ஐ., இடைக்கால அறிக்கை தாக்கல்!

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
ராஞ்சி :ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைப்பயற்சியில் ஈடுபட்டிருந்த மாவட்ட நீதிபதி, திட்டமிட்டு வேண்டுமென்றே ஆட்டோவால் மோதி கொல்லப்பட்டுள்ளதாக, உயர் நீதிமன்றத்தில், சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாதைச் சேர்ந்த மாவட்ட நீதிபதி உத்தவ் ஆனந்த், 49, ஜூலை 28ல் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஆட்டோ மோதி உயிரிழந்தார். முதலில் விபத்தாக கருதப்பட்ட இந்த
 ஜார்க்கண்ட் நீதிபதி இறந்தது எப்படி?சி.பி.ஐ., இடைக்கால அறிக்கை தாக்கல்!

ராஞ்சி :ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைப்பயற்சியில் ஈடுபட்டிருந்த மாவட்ட நீதிபதி, திட்டமிட்டு வேண்டுமென்றே ஆட்டோவால் மோதி கொல்லப்பட்டுள்ளதாக, உயர் நீதிமன்றத்தில், சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாதைச் சேர்ந்த மாவட்ட நீதிபதி உத்தவ் ஆனந்த், 49, ஜூலை 28ல் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஆட்டோ மோதி உயிரிழந்தார்.
முதலில் விபத்தாக கருதப்பட்ட இந்த சம்பவத்தில், அவர் மீது ஆட்டோ ஒன்று மோதியது தொடர்பான கண்காணிப்பு கேமரா பதிவுகள் வெளியாகின. வேகமாக சென்ற ஆட்டோ, நீதிபதி மீது மோதி, நிற்காமல் தப்பிச் சென்றது தெரியவந்தது.


latest tamil news



இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றமும் கவலை தெரிவித்திருந்தது.இந்த மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. விசாரணை தாமதமாக நடப்பதாக, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சி.பி.ஐ., சார்பில் விசாரணையின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:சம்பவம் நடந்த இடம், கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. ஆதாரங்களின்படி, ஆட்டோ டிரைவர் திட்டமிட்டு, வேண்டுமென்றே நீதிபதி மீது மோதியது உறுதி செய்யப்பட்டு உள்ளது.கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - chennai,இந்தியா
29-செப்-202108:18:28 IST Report Abuse
sankar சாதாரண மந்திரிமார்களுக்கே எங்கே சென்றாலும் செக்யூரிட்டி போடும்போது நீதியை காக்கும் நீதிபதிகளுக்கு செக்யூரிட்டி போடப்படாதஆ
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
24-செப்-202111:24:38 IST Report Abuse
J.Isaac ஆள்மாறாட்டம் பண்ணிவிடுவார்கள்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
24-செப்-202110:43:35 IST Report Abuse
vbs manian நீதி பதி வாக்கிங் போக கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X