சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாம்பரம் ரயில் நிலையம் அருகே கல்லுாரி மாணவி குத்திக்கொலை

Added : செப் 24, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை:காதல் விவகாரத்தில் தாம்பரம் ரயில் நிலைய நுழைவாயிலில் கல்லுாரி மாணவி ஸ்வேதா 19, குத்தி கொலை செய்யப்பட்டார். கொலை செய்த வாலிபர் தன் கழுத்தையும் கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் மதியழகன் 50; அரசு பஸ் ஓட்டுனர். இவரது மகள் ஸ்வேதா 19; தனியார் கல்லுாரியில் இளநிலை இரண்டாம் ஆண்டு படித்தார். நேற்று மதியம் 1:30 மணியளவில் கிழக்கு
 தாம்பரம் ரயில் நிலையம் அருகே கல்லுாரி மாணவி குத்திக்கொலை

சென்னை:காதல் விவகாரத்தில் தாம்பரம் ரயில் நிலைய நுழைவாயிலில் கல்லுாரி மாணவி ஸ்வேதா 19, குத்தி கொலை செய்யப்பட்டார். கொலை செய்த வாலிபர் தன் கழுத்தையும் கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் மதியழகன் 50; அரசு பஸ் ஓட்டுனர். இவரது மகள் ஸ்வேதா 19; தனியார் கல்லுாரியில் இளநிலை இரண்டாம் ஆண்டு படித்தார். நேற்று மதியம் 1:30 மணியளவில் கிழக்கு தாம்பரம் ரயில் நிலைய நுழைவாயில் முன் வாலிபர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அந்த வாலிபர் திடீரென கத்தியால் ஸ்வேதாவின் கழுத்தை அறுத்து மார்பு வயிறு ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தினார். பின் தன் கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதித்ததில் ஸ்வேதா இறந்தது தெரிந்தது. வாலிபருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விசாரணையில் அந்த நபர் நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த ஆதமங்களத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் 21 என தெரியவந்தது. பொறியியல் பட்டதாரியான இவர் மறைமலைநகரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.மருத்துவமனையில் போலீசாரிடம் ராமச்சந்திரன் அளித்த வாக்குமூலம்:

2019ல் சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு குடும்பத்தினருடன் ரயிலில் சென்றபோது எங்கள் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. காதலித்து வந்தோம். சில மாதங்களாக ஸ்வேதா பேசுவதை தவிர்த்தார். வேறு ஒருவருடன் பழகினார்.ஏமாற்றம் தாங்காமல் அவரை குத்தி கொலை செய்தேன். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.சேலையூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
25-செப்-202105:09:07 IST Report Abuse
meenakshisundaram ஸ்வாதி கொலை வழக்கு போலவே உள்ளது .இந்த ஆம்பிளை பசங்க ஒரு பெண் தன்னுடன் பேசினாலேஏ ஒரு தலை காதல் கொண்டு விட்டு முடிவில் கொலை செயது அந்த பெண் மற்றும் தனது குடும்பத்தாரை மீட்க முடியாத துயரத்தில் ஆழ்த்தி விடுவது சமூகத்தின் அவ நிலையே .
Rate this:
Cancel
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
24-செப்-202115:01:35 IST Report Abuse
திரு.திருராம் 2019முதல் பழக்கம் என்றால் அப்போது அந்த பெண்ணுக்கு வயது 15 அல்லது 16(இப்போது 19), பையனுக்கு வயது 17 அல்லது 18,,,,,அந்தவயதில் மலரும் காதல் அல்லது பாலியல் கவர்ச்சி, சமூக பொருளாதார முதிர்ச்சி எட்டும்போது கண்டிப்பாக கருகும், ///இந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில் புதிய மற்றும் பழைய சினிமாக்களையும் மறு ஒளிபரப்பு செய்ய ஒரு 10வருடத்துக்கு தடை மற்றும் ரியாலிட்டி நிகழ்சிகளுக்கு தடை மற்றும் மற்ற நிகழ்சிகளுக்கு தணிக்கை என செய்தால் அடுத்த தலைமுறை இளைஞர்களாவது உருப்பட வழி உண்டு,,,
Rate this:
sridhar - Chennai,இந்தியா
25-செப்-202107:53:44 IST Report Abuse
sridharமீடியா அமைதியாக இருப்பதற்கும் அவன் முகத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு , நல்லா பாருங்க ....
Rate this:
visu - Pondicherry,இந்தியா
26-செப்-202109:32:03 IST Report Abuse
visuசூப்பர் ஸ்ரீதர் ஜி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X