நாய் குட்டியை கடத்தி சிறை வைத்த குரங்கு

Added : செப் 24, 2021
Share
Advertisement
கோலாலம்பூர்:மலேஷியாவில் வனக் குரங்கு ஒன்று நாய்க் குட்டியை கடத்திச் சென்று மூன்று நாட்கள் சிறை வைத்த சம்பவம் நிகழ்ந்துஉள்ளது.மலேஷியாவில் தமன் லெஸ்தரி புத்ரா பகுதிக்குள்நுழைந்த குரங்கு பிறந்து இரு வாரங்களே ஆன நாய்க்குட்டியை கடத்திச் சென்று மின்சார கம்பத்தின்உச்சியில் அமர்ந்து கொண்டது. நாய்க் குட்டியை மீட்க அப்பகுதியினர் முயற்சித்த போது மின்சார கம்பத்தில்

கோலாலம்பூர்:மலேஷியாவில் வனக் குரங்கு ஒன்று நாய்க் குட்டியை கடத்திச் சென்று மூன்று நாட்கள் சிறை வைத்த சம்பவம் நிகழ்ந்துஉள்ளது.

மலேஷியாவில் தமன் லெஸ்தரி புத்ரா பகுதிக்குள்நுழைந்த குரங்கு பிறந்து இரு வாரங்களே ஆன நாய்க்குட்டியை கடத்திச் சென்று மின்சார கம்பத்தின்உச்சியில் அமர்ந்து கொண்டது. நாய்க் குட்டியை மீட்க அப்பகுதியினர் முயற்சித்த போது மின்சார கம்பத்தில் இருந்து மரத்திற்கு மரம் தாவியது குரங்கு.அந்த நிலையிலும் நாய்க் குட்டியை கீழே போட்டு விடாமல் பத்திரமாக அணைத்தபடி பாதுகாத்த அந்த குரங்கின் சாமர்த்தியத்தைப் பார்த்து அப்பகுதியினர் ஆச்சரியம் அடைந்தனர்.

குரங்கு விடாப்பிடியாகநாய்க் குட்டியை தர மறுத்து போக்கு காட்டி வந்தது. மூன்று நாட்கள் கடந்த நிலையில் நாய்க் குட்டி உணவின்றி சோர்வடைந்தது.இனியும் குரங்குப் பிடியில் நாய்க்குட்டி இருந்தால் இறந்துவிடும் என அஞ்சிய அப்பகுதி மக்கள் கற்களை வீசி எறிந்து குரங்கை விரட்டினர்.இதைத் தொடர்ந்துநாய்க்குட்டியை பத்திரமாகதரையில் போட்டு விட்டு அந்த குரங்கு வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது.

நாய்க் குட்டி மீட்கப்பட்டு உடலில் இருந்த சிறிய காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அந்த நாயை ஒருவர் தத்தெடுத்து உள்ளார்.மூன்று நாட்கள் நாய்க் குட்டியை சிறை வைத்த போதிலும் எந்த தொல்லையும் தராமல் தாயைப் போல பாதுகாத்த குரங்கின் அன்பு அப்பகுதி மக்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X