சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 32 இடங்களில் வருமான வரி சோதனை

Added : செப் 24, 2021
Share
Advertisement
சென்னை:சென்னையில், வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் மற்றும் சிறிய நிதி நிறுவனங்கள் தொடர்புடைய, 32 இடங்களில், வருமான வரி அதிகாரிகள், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.வரி ஏய்ப்பு புகாரில் சில நாட்களாக, டில்லி, ஹரியானா உட்பட, பல்வேறு மாநிலங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள், நிதி நிறுவனம் நடத்துவோர்
 சென்னையில் 32 இடங்களில் வருமான வரி சோதனை

சென்னை:சென்னையில், வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் மற்றும் சிறிய நிதி நிறுவனங்கள் தொடர்புடைய, 32 இடங்களில், வருமான வரி அதிகாரிகள், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

வரி ஏய்ப்பு புகாரில் சில நாட்களாக, டில்லி, ஹரியானா உட்பட, பல்வேறு மாநிலங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள், நிதி நிறுவனம் நடத்துவோர் சம்பந்தப்பட்ட இடங்களில், வருமான வரி அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை, தாசப்பிரகாஷ், சவுகார்பேட்டை, பாரிமுனை உட்பட, 32 இடங்களில், 150க்கும் மேற்பட்ட வருமான வரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள், சிறிய நிதி நிறுவனம் நடத்துவோரிடம், ஹவாலா பணப் புழக்கம் அதிகம் இருப்பதாகவும், அவர்கள் வரி ஏய்ப்பு செய்வதாகவும் புகார்கள் வந்தன.

அந்த புகாரின் அடிப்படையில், 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. அதில், வரி ஏய்ப்புக்கான பல்வேறு ஆவணங்கள் சிக்கி உள்ளன. முழுமையான விபரங்கள் சோதனை முடிந்த பின் தெரிய வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X