பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் அலுவலர் பணி: 'ரிசல்ட்' வெளியீடு

Added : செப் 24, 2021
Share
Advertisement
சென்னை:தோட்டக்கலை, வேளாண் அலுவலர் மற்றும் உதவி இயக்குனர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்ட செய்திக்குறிப்பு:தொழில் மற்றும் வணிக துறை உதவி இயக்குனர் பணியில் 11 காலியிடங்கள்; உதவி கண்காணிப்பாளர் 1; உதவி வேளாண்மை அலுவலர் 122 மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்

சென்னை:தோட்டக்கலை, வேளாண் அலுவலர் மற்றும் உதவி இயக்குனர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்ட செய்திக்குறிப்பு:தொழில் மற்றும் வணிக துறை உதவி இயக்குனர் பணியில் 11 காலியிடங்கள்; உதவி கண்காணிப்பாளர் 1; உதவி வேளாண்மை அலுவலர் 122 மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியில் 307 இடங்களுக்கு, இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில், போட்டி தேர்வு நடத்தப்பட்டது.

அதேபோல், தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பணியில் 28 மற்றும் தோட்டக்கலை அலுவலர் பணியில் 169 இடங்கள் மற்றும் வேளாண் அலுவலர் பதவிக்கு 365 இடங்களை நிரப்ப, ஏப்., 18, 19ல் தேர்வுகள் நடந்துள்ளன.

இந்த தேர்வுகளின் முடிவுகளை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X