உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறார் கமலா ஹாரிஸ்: பிரதமர் மோடி புகழாரம்

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (71) | |
Advertisement
வாஷிங்டன் : உலகெங்கிலும் உள்ள பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக கமலா ஹாரிஸ் இருக்கிறார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார். மேலும் இந்தியா வரவும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர்களுடனும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை
PM Modi, Kamala Harris, Modi US visit

வாஷிங்டன் : உலகெங்கிலும் உள்ள பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக கமலா ஹாரிஸ் இருக்கிறார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார். மேலும் இந்தியா வரவும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர்களுடனும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை வாஷிங்டனில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.


நெருங்கிய நட்பு நாடு இந்திய: கமலா


அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்த கமலா, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு இந்தியா என பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் கோவிட் வேகமாக பரவிய போது, அதனை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், தடுப்பூசி போடும் பணியையும் வேகப்படுத்தியதை கண்டு அமெரிக்கா பெருமிதம் கொள்கிறது. கோவிட் காலத்தில் இருநாடுகளும் ஒன்றாக இணைந்து வைரசுக்கு எதிராக போராடின. கோவிட் பரவலின் ஆரம்ப கட்டத்தில், உலகின் மற்ற நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்கிய நாடு இந்தியா.

பருவநிலை மாற்றத்தை இந்தியா தீவிரமாக எடுத்து வருகிறது. இரு நாடுகளும் இணைந்து செயலாற்றும் போது, உலகில் பெரும் தாக்கத்தை அது ஏற்படுத்தும் என்பது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news

அமெரிக்காவுக்கு நன்றி: மோடி


பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசியதாவது: கோவிட் இரண்டாவது அலையால் இந்தியா பாதிக்கப்பட்டபோது, எங்களுக்கு உதவிக்கரம் நீட்டியதற்காக அமெரிக்காவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள வலிமையான மற்றும் துடிப்பான மக்கள் இரு நாட்டிற்கு இடையே பாலமாக விளங்குகின்றனர். அவர்களின் பங்களிப்பும் பாராட்டத்தக்கவை. இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையிலேயே கூட்டாளிகள்; எங்களுக்கு ஒத்த மதிப்புகள், புவிசார் அரசியல் நலன்கள் பல உள்ளன. மேலும் எங்களுக்கு இடையே, ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கமலா இந்தியா வர வேண்டும்


அமெரிக்காவின் துணை அதிபராக உங்கள் (கமலா ஹாரிஸ்) தேர்வு ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வு. நீங்கள் உலகெங்கிலும் உள்ள பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறீர்கள். அதிபர் பைடன் மற்றும் உங்கள் தலைமையின் கீழ், இருதரப்பு உறவுகள் புதிய உயரங்களைத் தொடும் என நான் நம்புகிறேன். கமலாவின் வருகைக்காக இந்திய மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நேரத்தில், இந்தியா வரும்படி நான் உங்களை அழைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
24-செப்-202117:22:34 IST Report Abuse
Vittalanand ரொம்ப குளிருது
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
24-செப்-202117:07:40 IST Report Abuse
jayvee இது ஒரு அமெரிக்க மம்தா பனர்ஜீ என்பதை மோடி வெகு சீக்கிரம் உணர்வார்..
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-செப்-202116:52:36 IST Report Abuse
தமிழவேல் ஆமா,கோவாக்சின் ஊசி போட்டுக்கிட்ட இவரு எப்படி அமேரிக்கா போக முடிந்தது ? நான் பல தடவை சொன்னேன், அந்த 45 000 பைசர் 6 மாசத்துக்கு முன்னாலேயே இறக்குமதி செய்ததே இவங்களுக்குத்தான்..
Rate this:
HSR - MUMBAI,இந்தியா
24-செப்-202118:46:27 IST Report Abuse
HSRநீ பாவாடைய கிழி அது போதும்...
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-செப்-202122:40:26 IST Report Abuse
தமிழவேல் ஹாஜா சுல்தான், புத்தின்னு ஒன்னு இருந்தால், பதில் குடுத்துட்டு சட்டையை கிழிச்சிக்க.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X