பொது செய்தி

இந்தியா

இது உங்கள் இடம்: 'பென்ஷன்' என்பது பிச்சை அல்ல; மூத்த குடிமகன்களின் உரிமைத் தொகை!

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (86)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:எஸ்.ஆர்.சுப்ரமணியம், ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'லட்சக்கணக்கான ரூபாய் சம்பளம் பெற்று, கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் வாங்கி செல்வந்தராக இருக்கும் அரசு ஊழியர்களுக்கு எதுக்கு ஓய்வூதியம்?' என இப்பகுதியில், மதுரையிலிருந்து டாக்டர்
pension, Retirement, Govt Staff


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


எஸ்.ஆர்.சுப்ரமணியம், ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'லட்சக்கணக்கான ரூபாய் சம்பளம் பெற்று, கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் வாங்கி செல்வந்தராக இருக்கும் அரசு ஊழியர்களுக்கு எதுக்கு ஓய்வூதியம்?' என இப்பகுதியில், மதுரையிலிருந்து டாக்டர் எம்.செல்வராஜ் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த பென்ஷன் விவகாரம் குறித்து சில உண்மைகளை தெளிவாக்க விரும்புகிறேன்...

நான், மத்திய அரசு பணியில் 40 ஆண்டுகள் பணியாற்றி, 60 வயதில் பணி நிறைவு பெற்று, 10 ஆண்டுகளாக ஓய்வூதியத்தில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன். மாநில அரசு துறையில் எந்த பணியில் இருந்தாலும், டாக்டர் சொல்வது போல லஞ்சம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு; ஆனால், மத்திய அரசு பணி அப்படிப்பட்டது அல்ல. கேட்டாலும் 1 ரூபாய் கூட லஞ்சம் கிடைக்காத துறைகளும் உண்டு. கேட்காமலே, பையில் திணித்து விட்டுப் போகும் துறைகளும் உண்டு. நான், லஞ்சம் வாங்கியதே கிடையாது. இந்நாட்டில் எனக்கென சொந்தமாக வீடோ, 1 அடி நிலமோ கிடையாது. இன்னமும் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன்.


latest tamil news


நான் பணி நிறைவு பெறும் போது, என் கடைசி மாத சம்பளம் 30 ஆயிரம் ரூபாய் தான். டாக்டர் குறிப்பிட்டிருப்பது போல, லட்ச ரூபாய் அல்ல. கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் பென்ஷனாக வழங்கப்படும். அதாவது, 15 ஆயிரம் ரூபாய். அதில் மூன்றில் ஒரு பங்கு, 5,000 ரூபாயை, 'கம்யூட்டேஷன்' செய்ததில் மீதி 10 ஆயிரம் ரூபாய் தான் நிகர பென்ஷன். அகவிலைப்படி உள்ளிட்ட சமாச்சாரங்களால், தற்போது என் மாதாந்திர பென்ஷன் தொகை 20 ஆயிரம் ரூபாய். எங்கள் மகன் தனிக்குடித்தனம் சென்றதால் நானும், என் மனைவியும் பென்ஷன் தொகை 20 ஆயிரம் ரூபாயில் தான், வாடகை கொடுத்து, சாப்பாட்டு, மருத்துவ செலவை பார்த்து கொள்கிறோம்.

அந்த வாசகரின் கருத்துப்படி, பென்ஷன் இல்லையென்றால் நானும், என் மனைவியும் சோற்றுக்கு பிச்சை தான் எடுக்க வேண்டும். அரசு ஊழியர்களில் நேர்மையாக பணியாற்றியோரும் இருப்பர். அவர்களையும் மனதில் கொள்ள வேண்டும். ஓய்வூதியம் தேவை தானா என்ற கேள்வி, தமிழக அரசு ஊழியர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும்; சேவைத் துறையில் பணியாற்றி பென்ஷனில் உயிர் வாழும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தாது. பென்ஷன் என்பது பிச்சை அல்ல. ஆண்டுக்கணக்காக அரசு பணியில் இருந்து, பணி நிறைவு பெற்று இளைப்பாறிக் கொண்டிருக்கும் மூத்த குடிமகன்களின் உரிமைத் தொகை!

Advertisement
வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
25-செப்-202106:13:25 IST Report Abuse
Bhaskaran அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் உபரி வருமானம் மேலும் குறைந்தபட்சம் நாற்பதாயிரம் ஓய்வூதியம் நாற்பதாண்டு தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தொழிலாளிக்கு அவர் கட்டிய பி. எப் பணத்தில் பிடித்த. பணத்துக்கு ஓய் ஊதிய மாக வெறும் ஆயிரம் பல உயர் நீதிமன்றம் சொல்லியும் காதில் வாங்கி கொள்ளாத பிரதமர் நிதியாமைச்சர். எல்லாம் எங்கள் தலையெழுத்து
Rate this:
Cancel
24-செப்-202123:27:34 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K சிறு சிறு தனியார் கம்பெனி ஊழியர்களுக்கு எந்தவிதமான கடன் வசதியும் கிடையாது. வீடு கட்ட கடன், வாகனம் வாங்க கடன் மற்றும் எந்த சலுகைகளும் கிடையாது. சம்பளமும் மிகப் குறைவு. பயனாய் படியும் கிடையாது. ஒரு நாளைக்கு பத்து மணி நேர உழைப்பு. லஞ்சம் என்றால் என்ன என்று கூட தெரியாது. வாய்ப்பும் இல்லை. இந்த அழகில் கல்யாணம் செய்து கொண்டு , குடும்பத்தையும் நடத்தி, பிள்ளைகளையும் பள்ளி, கல்லூரி என படிக்க வைத்தும், ஒரு வீடு கூட வாங்க முடியாமல் வாடகை வீட்டில் இருந்து கொண்டு , சிறுக சிறுக சேமித்து வைத்த நகை, பணம், இன்சுரன்ஸ் போன்ற விஷயங்களுடன் தான் வயோதிக காலத்தை கழிக்கிறார்கள். அவர்களுக்கு என்று எந்த வகையிலும் அரசு மற்றும் வங்கி துறை சார்ந்த எந்த உதவியும் கிடைப்பதில்லை. இவர்களை பற்றி நினைக்கும் போது தான் ஆச்சரியமாகவும், வேதனையாகவும் உள்ளது.
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
24-செப்-202122:09:17 IST Report Abuse
s t rajan கோடீஸ்வரர்களாக இருப்பவர்கள் தான் MPs, MLAs ஆகிறார்கள். சொகுசு கார்கள், பங்களாக்கள், கல்லூரிகள், டிவி சேனல்கள், வணிக வளாகங்களுடன் வாழும் இந்த MP MLAக்களுக்கெல்லாம், சும்மா ஒரு term மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டாலும் லட்சம் லட்சமாக பென்ஷன் வாங்கும் போது, அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் குறைந்த பட்சம் ஊழியர்கள் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 60% ஆவது தரப்பட வேண்டும். அசெம்ப்ளிக்கே 10 வருடம் போகாத (multi billionaire) மு.கருணாநிதிக்கும் daily allowance கொடுத்த அவலத்தை என்ன சொல்ல. லஞ்ச ஊழல் மன்னன் லல்லு யாதவுக்கு இன்னும் பென்ஷன் தருகிறார்களோ என்னவோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X