பொது செய்தி

தமிழ்நாடு

'தனியார் நிறுவனத்திடம் பால் கொள்முதல் இல்லை'

Added : செப் 24, 2021
Share
Advertisement
சென்னை:'தனியார் நிறுவனத்திடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்படுவதில்லை' என்று ஆவின் மேலாண் இயக்குனர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:ஆவின் நிர்வாகம் வணிக நோக்கோடு செயல்படாமல், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் நலனை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. தற்போது பால் உற்பத்தி அதிகமாக உள்ளதால், விற்பனையை விட பால்

சென்னை:'தனியார் நிறுவனத்திடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்படுவதில்லை' என்று ஆவின் மேலாண் இயக்குனர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:ஆவின் நிர்வாகம் வணிக நோக்கோடு செயல்படாமல், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் நலனை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. தற்போது பால் உற்பத்தி அதிகமாக உள்ளதால், விற்பனையை விட பால் கொள்முதல் அதிகரித்து வருகிறது.தினசரி கொள்முதல் அளவு, கடந்த ஆண்டு 39.55 லட்சம் லிட்டராக இருந்தது. நடப்பாண்டு 39.81 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. தினசரி விற்பனை போக, உபரி பால் 8 முதல், 10 லட்சம் லிட்டர், பால் பவுடர் மற்றும் வெண்ணையாக உருமாற்றம் செய்யப்படுகிறது.தற்போது பால் பவுடர் மற்றும் வெண்ணெய் சந்தை மதிப்பு, உலகம் மற்றும் இந்திய அளவில் குறைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை, இவற்றின் சந்தை மதிப்பு உச்சத்தை அடையும். அப்போது விற்றால், கூடுதல் வருவாய் கிடைக்கும்.ஆவின் நிர்வாகம், தனியார் நிறுவனத்திடம் இருந்து பால் கொள்முதல் செய்வதில்லை. தற்போது சில்லரை பால் விற்பனையுடன், மொத்த பால் விற்பனை செய்யவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.மொத்த பால் விற்பனை செய்யும் போது, பால் பவுடர் மற்றும் வெண்ணெய் உற்பத்தி, இருப்பு அதிகரிப்பு வெகுவாக குறையும்.விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி, அவர்கள் உற்பத்தி செய்யும் பால் எவ்வித தடையும் இன்றி, ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X