பொது செய்தி

இந்தியா

ஆவடி தொழிற்சாலையிலிருந்து 118 பீரங்கி வாங்க அரசு முடிவு

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி : உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட118 அதி நவீன 'அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி'களை 7,523 கோடி ரூபாய்க்கு வாங்க ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது.டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியை தயாரித்துள்ளது. இந்த அதிநவீன பீரங்கியை பயன்படுத்த ராணுவ அமைச்சகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்தது. ஆவடி கன வாகன தொழிற்சாலையில்
DRDO, Defence ministry, Arjun tanks

புதுடில்லி : உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட118 அதி நவீன 'அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி'களை 7,523 கோடி ரூபாய்க்கு வாங்க ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியை தயாரித்துள்ளது. இந்த அதிநவீன பீரங்கியை பயன்படுத்த ராணுவ அமைச்சகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்தது. ஆவடி கன வாகன தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த அதிநவீன பீரங்கிகளை பிரதமர் மோடி பிப்ரவரியில் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.


latest tamil news



இந்நிலையில், 118 அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கிகளை 7,523 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்ய ராணுவ அமைச்சகம் நேற்று 'ஆர்டர்' கொடுத்துள்ளது.இந்த பீரங்கி, 58.5 டன் எடை உடையது. 10.638 மீட்டர் நீளமும் 9.456 மீட்டர் உயரமும் உடையது. 1,400 குதிரை சக்தி திறனுடன் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பீரங்கி வாகனம், நவீன 120 மி.மீ துப்பாக்கியுடன் இயங்குவதுடன் எந்த நேரத்திலும் எந்த தட்ப வெப்பத்திலும் தாக்குதல் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பீரங்கி வாகனங்கள் சமதளப் பரப்பில் மணிக்கு 70 கி.மீ வேகத்திலும், மேடு பள்ளங்கள் நிறைந்த மலைப்பகுதிகளிலும் மற்றும் கடுமையான நிலப்பகுதியிலும் மணிக்கு, 40 கி.மீ வேகத்திலும் இயங்கும் திறன் உடையவை.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ananth - KONGU MANDALAM TAMIZHAGAM INDIA SEYCHELLS,செசேல்ஸ்
24-செப்-202114:07:33 IST Report Abuse
Ananth 9.456 (3.3 மீட்டர்) அடி என்பது சரி.
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
24-செப்-202110:30:18 IST Report Abuse
JeevaKiran 9.456 மீட்டர் உயரமும் உடையது-கிட்டதட்ட மூன்று மாடி உயரம்.
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
24-செப்-202110:28:56 IST Report Abuse
JeevaKiran DRDO க்கு வாழ்த்துக்கள். 9.456 மீட்டர் உயரமும் உடையது. உயரம் கரெக்ட்தானா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X