பெண்ணிடம் ரூ. 13.65 லட்சம் மோசடி நைஜீரிய வாலிபர்கள் இருவர் சிக்கினர்

Added : செப் 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி-விலை உயர்ந்த பரிசு பொருள் அனுப்புவதாக கூறி, புதுச்சேரி பெண்ணிடம் ரூ. 13.65 லட்சம் மோசடி செய்த வழக்கில் நைஜீரியாவை சேர்ந்த இருவர் டில்லியில் சிக்கினர்.புதுச்சேரி, ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் மனோகரன் மனைவி ஜெயந்தி, 42. இவருக்கு பேஸ்புக் மூலம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எரிக் வால்கர் அறிமுகமானார். தான் டாக்டர் என தெரிவித்து, ஜெயந்தியுடன் பழகி

புதுச்சேரி-விலை உயர்ந்த பரிசு பொருள் அனுப்புவதாக கூறி, புதுச்சேரி பெண்ணிடம் ரூ. 13.65 லட்சம் மோசடி செய்த வழக்கில் நைஜீரியாவை சேர்ந்த இருவர் டில்லியில் சிக்கினர்.புதுச்சேரி, ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் மனோகரன் மனைவி ஜெயந்தி, 42. இவருக்கு பேஸ்புக் மூலம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எரிக் வால்கர் அறிமுகமானார். தான் டாக்டர் என தெரிவித்து, ஜெயந்தியுடன் பழகி வந்துள்ளார்.ஜெயந்தியின் மகளுக்கு பிறந்த நாள் என்பதால், விலை உயர்ந்த பரிசு பொருட்கள் அனுப்பியுள்ளதாக கூறிய எரிக் வால்கர், அதனை மொபைல் போனில் படம் பிடித்தும் அனுப்பி உள்ளார்.ஜூலை 26ம் தேதி, ஜெயந்திக்கு போன் வந்தது. அதில் பேசிய அங்கீதா என்ற பெண், தான் டில்லி விமான நிலைய அதிகாரி என தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் இருந்து பார்சல் வந்துள்ளதாகவும், விலை உயர்ந்த பொருட்கள் என்பதால், சுங்க வரி செலுத்தினால் விடுவிப்பதாக கூறியுள்ளார்.பணம் செலுத்த இந்திய வங்கி கணக்கு எண்ணையும் அனுப்பியுள்ளார். அந்த வங்கி கணக்கு எண்ணிற்கு ஜெயந்தி ரூ.13.65 லட்சத்தை நான்கு தவணைகளாக செலுத்தி உள்ளார். ஆனால் பரிசு பொருள் விடுவிக்கப்படவில்லை. சந்தேகமடைந்த ஜெயந்தி விசாரித்தபோது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் கடந்த 11ம் தேதி புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிந்து, மோசடி நபர்களை தேடி வந்தனர். வங்கி கணக்கு எண், மொபைல் எண்ணை வைத்து தீவிர விசாரணை நடத்தியபோது, டில்லியில் தங்கியுள்ள நைஜீரியாவை சேர்ந்த வாலிபர்கள் இருவர் ஜெயந்தியிடம் ஏமாற்றி பணம் பறித்தது தெரிய வந்தது.டில்லியில் முகாமிட்டுள்ள சைபர் கிரைம் போலீசார், நைஜீரியாவை சேர்ந்த இரண்டு வாலிபர்களை நேற்று சுற்றி வளைத்தனர். அவர்களை புதுச்சேரி கொண்டு வந்து சிறையில் அடைக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X