பொது செய்தி

இந்தியா

ஸ்ரீனிவாசா மோட்டார்ஸ் நிறுவன ஸ்கூட்டர் திருவிழா துவங்கியது

Added : செப் 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி ஸ்ரீனிவாசா மோட்டார்ஸ் நிறுவனம், யமஹா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் ஸ்கூட்டர் திருவிழா, புதுச்சேரி முருகா தியேட்டர் பின்புறம் உள்ள கொக்குபார்க் தீபாவளி பஜார் திடலில் நேற்று துவங்கியது.புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஜான்குமார் எம்.எல்.ஏ., ஸ்ரீனிவாசா மோட்டார்ஸ் நிறுவன

புதுச்சேரி-புதுச்சேரி ஸ்ரீனிவாசா மோட்டார்ஸ் நிறுவனம், யமஹா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் ஸ்கூட்டர் திருவிழா, புதுச்சேரி முருகா தியேட்டர் பின்புறம் உள்ள கொக்குபார்க் தீபாவளி பஜார் திடலில் நேற்று துவங்கியது.புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஜான்குமார் எம்.எல்.ஏ., ஸ்ரீனிவாசா மோட்டார்ஸ் நிறுவன மேலாண் இயக்குனர் அமிர்தலிங்கம், சித்ரா அமிர்தலிங்கம், விஷ்ணு, ரீனா விஷ்ணு, விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.வரும் 26 ம்தேதி வரை நான்கு நாட்கள் நடக்கும் இந்த ஸ்கூட்டர் திருவிழாவில் யமஹா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் பேசினோ 125 எப்.ஐ ஹைபிரிட் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் எளிதாக வாங்க பல்வேறு சலுகைகள், கடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.ஸ்கூட்டர் திருவிழாவில் நேரடியாக சென்று மனதிற்கு பிடித்த பேசினோ 125 எப்.ஐ ஹைபிரிட் ஓட்டி செல்லலாம். முழு பணத்தை கட்டினாலும், கடன் வசதியில் ஸ்கூட்டர் வாங்கினாலும் 6 ஆயிரம் ரூபாய் கேஷ் பேக் உண்டு. வாடிக்கையாளர்கள் அலைச்சல் இல்லாமல் 5 நிமிடத்தில் வாகன கடன் பெற சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது ஸ்கூட்டர் திருவிழாவின் சிறப்பு அம்சமாகும்.இதேபோன்று கேஷ் பேக் ஆபருடன் குறைந்தபட்ச தொகையாக 999 ரூபாய் செலுத்தியும் பேசினோ 125 எப்.ஐ ஹைபிரிட் ஸ்கூட்டரை வாங்கலாம். எக்ஸ்சேஜிலும் 6 ஆயிரம் ரூபாய் கேஷ் பேக் உண்டு. ஸ்கூட்டர் புக்கிங் செய்யும் ஒவ்வொருவருக்கும் 2,999 ரூபாய் மதிப்புள்ள பரிசு நிச்சயம் உண்டு. இதுமட்டுமின்றி பிரபல நிறுவனங்களின் 20,000 ரூபாய் கிப்ட் வவுச்சரும் பரிசாக பெறலாம்.சிறந்த மைலேஜ் கொண்ட பேசினோ 125 எப்.ஐ ைஹபிரிட் ஸ்கூட்டர் சப்தமின்றி என்ஜின் ஸ்டார் செய்ய உதவும் தொழில்நுட்பம், தானியங்கி ஸ்டாப் மற்றும் ஸ்டார்ட் வசதி, சைடு ஸ்டாண்டு இருந்தால் இன்ஜின் ஸ்டார்ட் ஆகாத நுட்பம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.அத்துடன் மேம்பட்ட ஒளிரும் விளக்கு, புளுடூத் இணைப்பு வசதி, யமஹா மோட்டார் சைக்கிள் கனெக்ட் எக்ஸ் செயலி, டிஸ்க் பிரேக் வசதி போன்ற அம்சங்களும் இடம் பெற்றிருக்கின்றன. கண் கவர் வண்ணங்களில் ஸ்கூட்டர் கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு 7200005787, 9894631673 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X