அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறப்பு டாக்டர்கள் நாளை புதுச்சேரி வருகை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறப்பு டாக்டர்கள் நாளை புதுச்சேரி வருகை

Added : செப் 24, 2021
Share
புதுச்சேரி-சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் இரண்டு சிறப்பு மருத்துவர்கள் நாளை புதுச்சேரியில் ஆலோசனை வழங்க உள்ளனர்.புதுச்சேரி, அண்ணா நகர், 14-வது குறுக்கு தெரு, ராஜிவ் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் அப்போலோ புரோட்டான் இன்பர்மேஷன் சென்டர் செயல்பட்டு வருகிறது.இம்மையத்திற்கு சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை துறையின்

புதுச்சேரி-சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் இரண்டு சிறப்பு மருத்துவர்கள் நாளை புதுச்சேரியில் ஆலோசனை வழங்க உள்ளனர்.புதுச்சேரி, அண்ணா நகர், 14-வது குறுக்கு தெரு, ராஜிவ் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் அப்போலோ புரோட்டான் இன்பர்மேஷன் சென்டர் செயல்பட்டு வருகிறது.இம்மையத்திற்கு சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை துறையின் இரண்டு சிறப்பு மருத்துவர்கள் நாளை (25ம் தேதி) வருகின்றனர். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆலோசனை வழங்க உள்ளனர்.மகளிர் மருத்துவ புற்றுநோய் சிகிச்சை நிபுணர் குமார் குபாலா, லேபராஸ்கோபிக், ரோபோடிக் கருவுறுதல், பாதுகாத்தல், நரம்பு சேமிப்பு நடைமுறைகள், கோல்போஸ்கோபி சென்டினல் நிணநீர் கணுக்கள் மேம்பட்ட கருப்பை புற்றுநோய், பெரிட்டோனியல் மேற்பரப்பு குறைபாடுகள், சைட்டோரேடெக்டிவ் சர்ஜரி, ைஹபர்தென்மின்சிண்ட்ரா பெரிட்டோனியல் கீமோதெரபி, 90 சதவீதம் மீண்டும் வரும் புற்றுநோய்கள், பிந்தைய கதிரியக்க சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் ராதாகிருஷ்ணன் சதீஷ்சன், குழந்தை அறுவை சிகிச்சை, கட்டிகளை நீக்குவது, பிறவி குறைபாடு, ெஹர்னியா, குடல் அறுவை சிகிச்சை, குழந்தை நெப்ரோலாஜிக்கல் அறுவை சிகிச்சை, குழந்தை அவசர அறுவை சிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை, கோலாஜிக்கல் எனப்படும் குழந்தை பருவ புற்றுநோய் அறுவை சிகிச்சை, குழந்தை எலும்பியல் அறுவை சிகிச்சை, குழந்தை கல்லீரல், இரைப்பை அறுவை சிகிச்சை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் ஆலோசனை தர உள்ளார்.முன் பதிவிற்கு 70106-88033,75500-09627 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X