இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : செப் 25, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
டில்லி கோர்ட்டில் துப்பாக்கிச்சூடுடில்லியில், நீதிமன்றத்துக்குள் நேற்று பட்டப்பகலில் பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. பிரபல ரவுடி ஜிதேந்திர கோகியை, வழக்கறிஞர்கள் போல உடையணிந்து வந்த எதிர்கோஷ்டியினர் சுட்டுக் கொன்றனர். மோதலை தடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு ரவுடிகள் பலியாகினர்.சிறுமி பலாத்காரம்முசாபர்நகர்:துப்பாக்கி முனையில், 17 வயது
Crime, Murder, Crime Roundup

டில்லி கோர்ட்டில் துப்பாக்கிச்சூடு
டில்லியில், நீதிமன்றத்துக்குள் நேற்று பட்டப்பகலில் பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. பிரபல ரவுடி ஜிதேந்திர கோகியை, வழக்கறிஞர்கள் போல உடையணிந்து வந்த எதிர்கோஷ்டியினர் சுட்டுக் கொன்றனர். மோதலை தடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு ரவுடிகள் பலியாகினர்.
சிறுமி பலாத்காரம்
முசாபர்நகர்:துப்பாக்கி முனையில், 17 வயது சிறுமியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.




அசாம் வன்முறை: இருவர் பலி


தரங்: வட கிழக்கு மாநிலமான அசாமில் தரங் மாவட்டம் தோலாபூர் பகுதியில் 27 ஆயிரம் சதுர அடி பரப்பில் விவசாய திட்டம் ஒன்றை செயல்படுத்த அரசு முடிவு செய்தது. இதையொட்டி அப்பகுதியை ஆக்ரமித்திருந்த 800 குடும்பங்களை வெளியேற்ற அரசு அதிகாரிகள், போலீசாருடன் சென்றனர். அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற மறுத்து போலீசாரை கற்களாலும், உருட்டுக் கட்டைகளாலும் தாக்கினர். ஆக்கிரமிப்பாளர்களுக்கும், போலீசுக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலில் இருவர் உயிரிழந்தனர். ஒன்பது போலீசார் படுகாயமடைந்தனர்.


ரூ.2 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்


பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு ரயில்வே பாதுகாப்பு படை குற்றப்புலனாய்வு மற்றும் சுங்க தடுப்பு பிரிவினர் ஒருங்கிணைந்து, பாலக்காடு சந்திப்பு ரயில்வே ஸ்டேஷனில் நேற்று காலை சோதனை நடத்தினர். அப்போது, ஐதராபாதிலிருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லும் சபரி எக்ஸ்பிரசில் பயணியரிடம் நடத்திய சோதனையில், மும்பையை சேர்ந்த உத்தம் கோரை 32, மெனஸ் ஜனா, 31 ஆகியோரிடமிருந்து, 4.928 கிலோ எடை உடைய தங்கக் கட்டிகள், நகைகள் இருப்பது கண்டறிப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.இவற்றின் மதிப்பு, 2 கோடியே, 16 லட்சத்து, 50 ஆயிரம். இருவரும் கைது செய்யப்பட்டனர்.


பெங்களூரில் வெடி விபத்து; இருவர் பலி


பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூரு சாம்ராஜ்பேட்டை டி.சி.எம்.ராயன் சதுக்கம் அருகில் ஸ்ரீபத்ரகாளி அம்மன் லாரி சர்வீஸ் என்ற நிறுவனத்தின் குடோன் உள்ளது. இந்த குடோனுக்கு நேற்று 80 பட்டாசு பெட்டிகளை ஏற்றி கொண்டு 'டாடா ஏஸ்' வாகனம் வந்தது. அனைத்து பெட்டிகளும் குடோனுக்குள் இறக்கி வைக்கப்பட்டன. சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது. நுழைவு பகுதியில் இருந்த இரண்டு பட்டாசு பெட்டிகளும் வெடித்தன.அப்போது குடோனிலிருந்த இரண்டு நபர்கள் துாக்கி வீசப்பட்டனர். எதிரே இருந்த காம்பவுன்ட் சுவர் மீது சிலர் துாக்கி வீசப்பட்டனர். இதில் இருவர் கை, கால், தலை என உடல் சிதறி இறந்தனர். ஐந்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் ஒருவர் தமிழகத்தின் திருக்கோவிலுாரைச் சேர்ந்த மனோகரன், 40, என்பவர் என தெரியவந்துள்ளது.


4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ஷோபியன்: ஜம்மு - காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் அனாயத் அஷ்ரப் தார் என்ற பயங்கரவாதி, மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் கிடைத்தன.நேற்று முன்தினம் இரவு அங்கு பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த அனாயத் சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோல் பாரமுல்லா மாவட்டத்தில் பாக்., எல்லைக்குள் இருந்து ஊடுருவ முயன்ற மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். பயங்கரவாதிகள் வைத்திருந்த ஏராளமான வெடிகுண்டுகள் மற்றும்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே குப்வாரா மாவட்டத்தில் ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


குழந்தை கொலை: தாய் கைது


கோர்பா: சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் பெண் ஒருவர், தன் இரண்டரை வயது குழந்தையை தரையில் வேகமாக துாக்கி வீசி கடுமையாக தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த குழந்தை, பரிதாபமாக உயிரிழந்தது.போலீசார் நடத்திய விசாரணையில் இந்த பெண் மன நலக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தாய்ப்பால் கேட்டு குழந்தை தொடர்ந்து வற்புத்தியதால், ஆத்திரமடைந்த அந்த பெண், குழந்தையை தாக்கியது விசாரணையில் தெரியவந்தது. அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.


பஸ் விபத்து: 6 பேர் பலி


ரைகஞ்ச்: மேற்கு வங்கத்தின் தினஜ்பூர் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்ளை ஏற்றிச் சென்ற பஸ், சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.


சிறுமி சித்ரவதை: பெண் கைது


ஆமதாபாத்: குஜராத்தின் பாட்டன் மாவட்டத்தில் லாக்கி மக்வானா, 40, என்ற பெண், ஒரு ஆணுடன் பேசியதை பக்கத்து வீட்டில் வசிக்கும், 11 வயது சிறுமி பார்த்துள்ளார். இந்த விஷயத்தை சிறுமி யாரிடமாவது சொல்லி இருப்பாரோ என்ற அச்சத்தில், அந்த பெண், சிறுமியை அழைத்துப் பேசி உள்ளார். சிறுமியிடம் இருந்து உண்மையை பெற, சுடும் எண்ணெயில் அவரின் கையை விட்டு சித்ரவதை செய்துள்ளார். புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த பெண் கைது செய்யப்பட்டார்.


latest tamil news





தமிழக நிகழ்வுகள்:




11 கிலோ தங்கம் பறிமுதல்


மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலத்தின் சொகுசு பங்களா, அலுவலகம் என, 12 மணி நேரத்திற்கும் மேல் நடந்த சோதனையில், 11 கிலோ தங்கம், 15.25 கிலோ சந்தன மர பொருட்கள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.



படுபாதகி பாட்டி: பலியானது குழந்தை


கோவை: அழுது கொண்டே இருந்த குழந்தையின் வாயில், பிஸ்கட் பேப்பரை பாட்டி திணித்ததால் மூச்சு திணறி இறந்தது.

கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் நித்யானந்தம்; மனைவி நந்தினி, 24; இரண்டு மகன்கள்.சில மாதங்களுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால், 1 வயது மகன் துர்கேஷ் உடன், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தாய் நாகலட்சுமி வீட்டுக்கு சென்று நந்தினி தங்கினார். நந்தினி வேலைக்கு செல்லும் நிலையில், குழந்தையை நாகலட்சுமி கவனித்து வந்தார். நேற்று முன்தினம், வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பினார். அப்போது துர்கேஷ், அசைவின்றி தொட்டிலில் படுத்திருந்தான்.அதிர்ச்சியடைந்த அவர், தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்றார். பரிசோதித்த டாக்டர்கள், இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தையின் உடல் முழுதும் சிறு, சிறு காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார், நந்தினி, நாகலட்சுமியிடம் விசாரித்தனர். இதில், குழந்தையை அடித்த பாட்டி, அழுகையை நிறுத்த பிஸ்கட் பேப்பரை வாயில் திணித்ததால், குழந்தை பலியானது தெரிந்தது.


தாம்பரம் ரயில் நிலையம் அருகே கல்லுாரி மாணவி குத்திக்கொலை


சென்னை:காதல் விவகாரத்தில் தாம்பரம் ரயில் நிலைய நுழைவாயிலில் கல்லுாரி மாணவி ஸ்வேதா 19, குத்தி கொலை செய்யப்பட்டார். கொலை செய்த வாலிபர் தன் கழுத்தையும் கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் மதியழகன் 50; அரசு பஸ் ஓட்டுனர். இவரது மகள் ஸ்வேதா 19; தனியார் கல்லுாரியில் இளநிலை இரண்டாம் ஆண்டு படித்தார். நேற்று மதியம் 1:30 மணியளவில் கிழக்கு தாம்பரம் ரயில் நிலைய நுழைவாயில் முன் வாலிபர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அந்த வாலிபர் திடீரென கத்தியால் ஸ்வேதாவின் கழுத்தை அறுத்து மார்பு வயிறு ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தினார். பின் தன் கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதித்ததில் ஸ்வேதா இறந்தது தெரிந்தது. வாலிபருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.


3 குழந்தைகளை கொன்று தாயும் துாக்கிட்டு தற்கொலை


வேலுார் : வேலுார், சலவன்பேட்டை ஆனகுளத்தம்மன் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 30. 'டைல்ஸ்' ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ஜீவிதா, 26. இவர்களுக்கு, 6 வயதில் மகள், 5 வயதில் மகன், 6 மாத ஆண் குழந்தை இருந்தது.சம்பாதிப்பதை குடித்தே அழிக்கும் தினேஷ்குமாருக்கும், ஜீவிதாவுக்கும் தகராறு நடக்கும். நேற்று மாலை வரை, அவரது வீட்டு கதவு திறக்காமல் இருந்தது. வேலுார் தெற்கு போலீசார் வந்து, கதவை உடைத்து பார்த்தனர்.ஒரு அறையில் மின் விசிறியில் ஜீவிதா துாக்கில் சடலமாக தொங்கினார். அருகில் மூன்று குழந்தைகளும் இறந்து கிடந்தன.குடும்ப தகராறில் விரக்தியடைந்த ஜீவிதா, மூன்று குழந்தைகளின் கழுத்தை சேலையால் நெரித்து கொலை செய்து, அவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தலைமறைவான தினேஷ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.


16வது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை


சென்னை: பள்ளி மாணவி 16வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். கொளத்துார் ஜி.கே.எம்.காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர், 38; மளிகை கடை நடத்துகிறார். இவரது மகள் வைஜெயந்தி, 16, சூரப்பட்டு தனியார் பள்ளியில் படித்தார். இவர் படிப்பில் கவனம் செலுத்தவில்லையென, சமீபத்தில் பாஸ்கரை பள்ளிக்கு வரவழைத்து ஆசிரியர்கள் புகார் செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த வைஜெயந்தி, நேற்று மாலை பள்ளி முடிந்து, கொரட்டூர் வாட்டர் கெனால் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பிற்குச் சென்றுள்ளார்.அங்கு, 16வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொரட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


ஆபாச பேச்சு: ஆசிரியர் கைது


புதுக்கோட்டை: மாணவியிடம் அலைபேசியில் ஆபாசமாக பேசிய தனியார் பள்ளி ஆசிரியர், 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை டி.வி.எஸ்., கார்னர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்தவர் வணிகவியல் ஆசிரியர் சண்முகநாதன் 48. இவர், அப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவியிடம் அலைபேசியில் ஆபாசமாக பேசி உள்ளார்.புதுக்கோட்டை டவுன் போலீசார் நேற்று முன்தினம் இரவு சண்முகநாதனை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர். அவர் நேற்று காலை தனக்கு நெஞ்சுவலி எனக்கூறியதை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவ பரிசோதனைக்கு பின் நேற்று மதியம் புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி சத்யா உத்தரவுப்படி, திருமயம் கிளைச் சிறையில் சண்முகநாதன் அடைக்கப்பட்டார்.


லஞ்ச வி.ஏ.ஓ., கைது


நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சாத்தாம்பாடி கிராம வி.ஏ.ஓ., தங்கவேல், 52. இவரிடம் வத்திபட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னழகன் என்பவர் விவசாய நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தார். தங்கவேல் 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.சின்னழகன், திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். நேற்று சின்னழகனிடம், 4,000 ரூபாய் வாங்கிய தங்கவேலை போலீசார் கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
24-செப்-202117:12:25 IST Report Abuse
jayvee சீரியல் பார்த்து சீரழிந்த பாட்டி
Rate this:
Cancel
Ranjith Rajan - CHENNAI,சிங்கப்பூர்
24-செப்-202116:39:13 IST Report Abuse
Ranjith Rajan படு பாதகி பாட்டி பலியான குழந்தை. இந்த ரைமிங் இப்போ தேவையா ? லாரி டமால் டிரைவர் பணால் போன்ற செய்தியின் துயரத்தை நகையாடுகிற தலைப்பு.
Rate this:
Cancel
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
24-செப்-202114:08:52 IST Report Abuse
திரு.திருராம் மொத்த செய்திகளின் சாரம், கலியுகம் முற்றிவருகிறது என்பதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X