பொது செய்தி

இந்தியா

செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம்

Added : செப் 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி-செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் பொன்மகன் பொதுவைப்பு நிதி துவங்குவதற்கான சிறப்பு முகாம் வரும் அக்., 21ம் தேதி வரை நடக்கிறது.புதுச்சேரி கோட்ட அஞ்சலகங்களின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பு:புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் செல்வமகள் சேமிப்பு கணக்கு மற்றும் பொன்மகன் பொது வைப்பு நிதி துவங்குவதற்கான சிறப்பு

புதுச்சேரி-செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் பொன்மகன் பொதுவைப்பு நிதி துவங்குவதற்கான சிறப்பு முகாம் வரும் அக்., 21ம் தேதி வரை நடக்கிறது.புதுச்சேரி கோட்ட அஞ்சலகங்களின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பு:புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் செல்வமகள் சேமிப்பு கணக்கு மற்றும் பொன்மகன் பொது வைப்பு நிதி துவங்குவதற்கான சிறப்பு முகாம் நடந்து வருகிறது.முகாம் வரும் அக்டோபர் 21ம் தேதி வரை நடக்கிறது. இதில் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் மேற்படிப்பு மற்றும் திருமணம் போன்ற எதிர்கால தேவைகளுக்காக செல்வ மகள் சேமிப்பு கணக்கில் சேமிக்கமுடியும்.அதே போன்று அனைத்து வயது ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் 500 ரூபாய் செலுத்தி, பொது வைப்பு நிதி கணக்கினைத் துவங்கலாம்.பொது உறுப்பினர் மற்றும் சமூக ஆர்வளர்கள், தங்கள் பகுதியில் இருக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பத்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து 250 ரூபாய் செலுத்தி செல்வமகள் சேமிப்பு கணக்கினை துவங்கி, அவர்கள் எதிர்காலத்திற்கான நிதி ஆதரவு அளிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு 0413- 2337017 என்ற தொலைபேசி எண்ணிலும் மற்றும் அனைத்து அஞ்சலங்களையும் அணுகலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X