பொது செய்தி

இந்தியா

ரங்கசாமிக்கு ராசி இல்லாத ராஜ்யசபா

Added : செப் 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி-என்.ஆர்.காங்., கட்சிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வாய்ப்பு இருந்தும், இரண்டாவது முறையாக கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுக் கப்பட்டுள்ளதால், அக்கட்சியினர் விரக்தியில் உள்ளனர்.புதுச்சேரி அரசியலில் தனி செல்வாக்கு கொண்ட ரங்கசாமி, கடந்த 2006ம் ஆண்டு காங்., சார்பில் தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வராக பதவி வகித்தார் அப்போது, உட்கட்சிக்குள் ஏற்பட்ட பூசலால், 2008

புதுச்சேரி-என்.ஆர்.காங்., கட்சிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வாய்ப்பு இருந்தும், இரண்டாவது முறையாக கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுக் கப்பட்டுள்ளதால், அக்கட்சியினர் விரக்தியில் உள்ளனர்.புதுச்சேரி அரசியலில் தனி செல்வாக்கு கொண்ட ரங்கசாமி, கடந்த 2006ம் ஆண்டு காங்., சார்பில் தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வராக பதவி வகித்தார் அப்போது, உட்கட்சிக்குள் ஏற்பட்ட பூசலால், 2008 செப்டம்பர் 4ம் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.2011ல் நடந்த பொதுத் தேர்தலில், என்.ஆர்.காங்., என்ற புதிய கட்சியை துவங்கி, அ.தி.மு.க., - தே.மு.தி.க., - கம்யூ., கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.இத்தேர்தலில் என்.ஆர்.காங்., 15 இடங்களிலும், அ.தி.மு.க., 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. அ.தி.மு.க.,விற்கு 'டிமிக்கி' கொடுத்துவிட்டு சுயேச்சை ஆதர வுடன் ஆட்சி அமைத்தார். ராஜ்யசபா தேர்தலின் போது தன் கட்சிஎம்.எல்.ஏ.,க்கள் மூவர்சிக்கலை ஏற்படுத்தினர்.இதனால்,2015ல் நடந்த ராஜ்யசபா தேர்தலில், எம்.பி., பதவியை அ.தி.மு.க.,விற்கு விட்டுக் கொடுத்தார்.ரங்கசாமியின் தீவிர ஆதரவாளரான கோகுல கிருஷ்ணன் அ.தி.மு.க., வில் இணைந்து, அக்கட்சி சார்பில் ராஜ்ய சபா எம்.பி., ஆனார்.இந்நிலையில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி, பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.என்.ஆர்.காங்., 10 இடங்களிலும், பா.ஜ., 6 இடங்களில் வெற்றி பெற்று, கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.கூட்டணியில் அதிக எம்.எல்.ஏ.,க்களை பெற்றுள்ளதால், ராஜ்ய சபா தேர்தலில் என்.ஆர்.காங்., சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என, அக்கட்சியினர் கருதினர்.ஆனால், இம்முறையும் கூட்டணி கட்சியான பா.ஜ.,விற்கு எம்.பி., பதவியை ரங்கசாமி விட்டுக் கொடுத்துள்ளார்.என்.ஆர்.காங்., கட்சி ஆரம்பித்து ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு இரண்டு முறை வாய்ப்பு இருந்தும் கிடைக்காமல் போனதால் கட்சியினர் விரக்தியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X