பொது செய்தி

இந்தியா

பா.ஜ., வேட்பாளர் மனு ஏற்பு 5 சுயே., மனுக்கள் தள்ளுபடி

Added : செப் 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் மனு ஏற்கப்பட்டது. சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்த 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.புதுச்சேரி ராஜ்யசபா தேர்தலுக்கான மனுத் தாக்கல் கடந்த 15ம் தேதி துவங்கி, நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. பா.ஜ., வேட்பாளர் செல்வகணபதி நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார்.சுயேட்சைகளாக பத்மராஜன், ஸ்ரீராமச்சந்திரன்,

புதுச்சேரி-புதுச்சேரி ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் மனு ஏற்கப்பட்டது. சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்த 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.புதுச்சேரி ராஜ்யசபா தேர்தலுக்கான மனுத் தாக்கல் கடந்த 15ம் தேதி துவங்கி, நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. பா.ஜ., வேட்பாளர் செல்வகணபதி நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார்.சுயேட்சைகளாக பத்மராஜன், ஸ்ரீராமச்சந்திரன், ஆனந்த், ஜார்ஜ் அகஸ்டின், ஹரிஹரன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று பகல் 12 மணிக்கு நடந்தது.மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் முனிசாமி மனுக்களை பரிசீலனை செய்தனர். பா.ஜ., வேட்பாளர் செல்வகணபதி, அசோக்பாபு எம்.எல்.ஏ., ஆகியோர் மனு பரிசீலனைக்கு வந்திருந்தனர்.தேர்தல் நடத்தும் அனுவலர் முனிசாமி பா.ஜ., வேட்பாளர் மனு ஏற்கப்பட்டதாக அறிவித்தார். மற்ற 5 பேரின் மனுக்கள் முன்மொழிவு படிவத்தில் எம்.எல்.ஏ.,க்கள் முன்மொழியாததால் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவித்தார்.பா.ஜ.,. வேட்பாளர் செல்வகணபதி மனு மட்டும் ஏற்கப்பட்டதால் வரும் 27ம் தேதி அதிகாரப்பூர்வமாக அவர், தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்து, அதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.இதற்கிடையே ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவித்தது முதல் புதுச்சேரி மாநில அரசியலில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்புகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X