அங்கன்வாடி ஊழியர்கள் சட்டசபை முன் திடீர் தர்ணா

Added : செப் 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி-பணி நீட்டிப்பு வழங்க கோரி, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சட்டசபை எதிரே திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும்உதவியாளர்கள் கடந்த ஜூன் மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக பணி அமர்த்தப்பட் டனர்.தற்போது பணி காலம் முடிவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து,

புதுச்சேரி-பணி நீட்டிப்பு வழங்க கோரி, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சட்டசபை எதிரே திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும்உதவியாளர்கள் கடந்த ஜூன் மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக பணி அமர்த்தப்பட் டனர்.தற்போது பணி காலம் முடிவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து, அவர்கள் பணி நீட்டிப்பு செய்யக் கோரி நேற்று காலை 10 மணியளவில் சட்டசபை எதிரே 50க்கும் மேற்பட்டோர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னை குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறியதை ஏற்று, அனைவரும் கலைந்துச் சென்றனர்.தொடர்ந்து அவர்கள் முதல்வரிடம் மனு கொடுத்தனர்.அதில், கடந்த ஜூன் முதல் மூன்று மாதத்திற்கு அங்கன்வாடி ஊழியர்களாக தற்காலிகமாக பணி அமர்த்தப்பட்டோம். தற்போது பணி காலம் முடிவடைவதால், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த எங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.எனவே, தற்காலிக பணியை மேலும் நீட்டித்து உத்தரவிடவேண்டும்' என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X