உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பால் கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பால் கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பம்

Added : செப் 24, 2021
Share
புதுச்சேரி-உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பால், தொகுதி பங்கீடு செய்வதில் அரசியல் கட்சிகளுக்குள் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.புதுச்சேரியில், கடந்த நான்கு மாதங்களாக முதல்வர் பதவி ஏற்பு, சபாநாயகர் தேர்தல், அமைச்சர்கள் பதவியேற்பு, பட்ஜெட் கூட்டத் தொடர் என பிரதான கட்சிகள் பரபரப்பாக இருந்தன. இந்நிலையில் ராஜ்ய சபா எம்.பி, தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால்,

புதுச்சேரி-உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பால், தொகுதி பங்கீடு செய்வதில் அரசியல் கட்சிகளுக்குள் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.புதுச்சேரியில், கடந்த நான்கு மாதங்களாக முதல்வர் பதவி ஏற்பு, சபாநாயகர் தேர்தல், அமைச்சர்கள் பதவியேற்பு, பட்ஜெட் கூட்டத் தொடர் என பிரதான கட்சிகள் பரபரப்பாக இருந்தன. இந்நிலையில் ராஜ்ய சபா எம்.பி, தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால், பிரதான அரசியல் கட்சிகளிடையே மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இது ஒரு வழியாக முடிவுக்கு வந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம், மாநில தேர்தல் ஆணையம் அதிரடியாக உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டமாக நடத்தப்படும் என அறிவித்தது.இந்த அறிவிப்பு, பிரதான அரசியல் கட்சிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நடைபெறுவதால், வேறு வழியின்றி அவசர, அவசரமாக தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு பணிகள் துவங்கியுள்ளன.இந்த தேர்தலில், பிரதான அரசியல் கட்சிகள், சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட கூட்டணி தொடரும் நிலை உள்ளது. என்.ஆர்.காங்., 10 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதனால், அதிக இடங்களில் போட்டியிட முயற்சித்து வருகிறது. ஆனால், கூட்டணி கட்சிகளான பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வும் அதிக இடங்களில் போட்டியிட விரும்புகின்றன. இதேபோன்று 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தி.மு.க, உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், கூட்டணியில் உள்ள காங்.,; கம்யூ., மற்றும் வி.சி., உள்ளிட்ட கட்சிகளும் அதிக இடங்களில் போட்டியிட முயற்சித்து வருகின்றன.இதனால், பிரதான கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதி பங்கீட்டில் பிரச்னை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X