பொது செய்தி

இந்தியா

கொரோனா இறப்புக்கு இழப்பீடு; மத்திய அரசுக்கு கோர்ட் பாராட்டு

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தொற்றால் இறந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் மத்திய அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் பாராட்டி உள்ளது.கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் நேற்று முன்தினம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், 'கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின்
Corona Virus, Covid 19, Supreme Court, SC

புதுடில்லி: கொரோனா தொற்றால் இறந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் மத்திய அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் பாராட்டி உள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் நேற்று முன்தினம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், 'கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு மாநில அரசுகள் 50 ஆயிரம் ரூபாய் வழங்க, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ''கொரோனாவுக்கு பலியானவர்களின் உயிரை மீட்டு தர முடியாது.''எனினும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் நோக்கில் இழப்பீடு வழங்கப்பட உள்ளது,'' என்றார்.


latest tamil news



இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: கொரோனாவால் இறந்தோரின் குடும்பத்துக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் இழப்பீடு வழங்கப்பட உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இது பல குடும்பத்தினரின் கண்ணீரை துடைக்கும். இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் இழப்பீடு வழங்குவது எளிதல்ல. இந்தப் பிரச்னையில் இந்தியா செய்துள்ளதை மற்ற நாடுகள் செய்யவில்லை. இதற்காக மத்திய அரசை பாராட்டுகிறோம். இழப்பீடு வழங்குவது தொடர்பாக அடுத்த மாதம் 4ம் தேதி சில வழிகாட்டுதல்களை தெரிவிப்போம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


தற்கொலை செய்தோரின் குடும்பத்துக்கும் இழப்பீடு


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டோரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க முடியாது என, மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், 'கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, 30 நாட்களுக்குள் தற்கொலை செய்து கொண்டோரின் குடும்பத்துக்கும் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - CHENNAI,இந்தியா
24-செப்-202114:29:06 IST Report Abuse
R S BALA மொதல்ல கொரோனாவால் இறந்தோரின் ரெகார்ட் சரி பண்ணிட்டு .. பிறகு நிவாரணம் கொடுப்பது பற்றி யோசிக்க வேண்டும் .. இதில் எந்த ஒரு அதிகாரி அதாவது வருவாய் ஆய்வாளர் கிராமநிர்வாக அலுவலர் தாசில்தார் மற்றும் இத்யாதிகள் தலையீடும் இல்லாமல் நேரிடையாக வங்கியில் செலுத்துதல் வேண்டும் .. இல்லையேல் இது வெறும் ஏட்டளவின் அறிக்கையே ..
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
24-செப்-202113:47:26 IST Report Abuse
sankaseshan அப்பு முட்டாள்தனமாக கமெண்ட்ஸ் போடாதே. அரசின் செயல்களை பாராட்டி இருக்கு உனக்கு ஏன் எரிகிறது முதல் அலையின் பொது உலகம் முழுவதும் மெழுகுவர்த்தி கொழுத்த பட்டது இந்தியாவிலும் விளக்கு ஏற்றப்பட்டன நீ ஏற்றியிருக்க மாட்டாய். ஏற்றியவர்களை பழிக்க உனக்கு என்ன உரிமை
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
24-செப்-202112:35:07 IST Report Abuse
r ravichandran அமெரிக்கா மக்கள் தொகை 40 கோடி, கொரோனா இறப்பு 675135 நபர்கள். இந்தியா மக்கள் தொகை 140 கோடி, கொரோனா இறப்பு 465399 நபர்கள். மருத்துவ வசதிகள் நிறைந்த உலகின் பணக்கார , சுய கட்டுப்பாடுகள் நிறைந்த மக்கள் உள்ள அமெரிக்காவை விட இந்தியாவில் இறப்புகள் குறைவு. உலகின் எந்த நாடும் கொரோனா இறப்பு நிவாரண தொகை வழங்கவில்லை. இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களுக்கும் தடுப்பூசி 280 கோடி டோஸ் பணம் கொடுத்து வாங்கி இலவசமாக மத்திய அரசு கொடுக்கிறது. Covishield, covaxsin இறெண்டும் இந்தியா விஞ்ஜானிகள் கண்டு பிடித்தது இல்லை. இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவ கம்பெனிகள் , மருந்து கண்டு பிடித்த வெளிநாட்டு மருந்து கம்பெனிகள் இடம் இருந்து பல ஆயிரம் கோடிகள் கொடுத்து காப்புரிமை பெற்று தயாரிக்கின்றன. மத்திய அரசு 50000 கொடுப்பதே பெரிய விஷயம்.4.5 லட்சம் மக்களுக்கு கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X