இந்திய பயணியருக்கு கட்டுப்பாடு: பிரிட்டன் அதிகாரிகள் விளக்கம்

Added : செப் 24, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
லண்டன் : 'அனைத்து நாடுகளின் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வழங்கும் நடைமுறை குறைந்தபட்ச அளவுகோலை பூர்த்தி செய்ய வேண்டும்' என, பிரிட்டன் அரசு தெரிவித்து உள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - ஆஸ்ட்ராஜெனகா இணைந்து தயாரித்த 'கோவிஷீல்டு' தடுப்பூசியை மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்து நம் நாட்டில் வினியோகித்து
India, UK, Britain

லண்டன் : 'அனைத்து நாடுகளின் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வழங்கும் நடைமுறை குறைந்தபட்ச அளவுகோலை பூர்த்தி செய்ய வேண்டும்' என, பிரிட்டன் அரசு தெரிவித்து உள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - ஆஸ்ட்ராஜெனகா இணைந்து தயாரித்த 'கோவிஷீல்டு' தடுப்பூசியை மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்து நம் நாட்டில் வினியோகித்து வருகிறது. இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்க பிரிட்டன் அரசு மறுத்தது.

'இரண்டு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட இந்திய பயணியர் பிரிட்டன் வரும் போது தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களாகவே கருதப்படுவர்' என, சமீபத்திய பயண வழிகாட்டுதலில் பிரிட்டன் அரசு தெரிவித்தது. அவர்களுக்கு 10 நாள் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்தது.

இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. 'ஆனாலும் இந்தியாவில் தடுப்பூசிக்கான சான்றிதழ் வழங்கும் முறையில் சிக்கல் இருப்பதால், பிரிட்டன் வரும் இந்திய பயணியர் தடுப்பூசி போடாதவர்களாகவே தொடர்ந்து கருதப்படுவர்' என, அறிவித்தது. இது சர்வதேச பயணியர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil newsஇது குறித்து பிரிட்டன் அரசு அதிகாரிகள் கூறியதாவது: பிரிட்டன் அரசின் தடுப்பூசி கொள்கையின்படி 'பைஸர் பயோ என்டெக், ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராஜெனகா, மாடர்னா, ஜான்சன், ஆஸ்ட்ராஜெனகா கோவிஷீல்டு, ஆஸ்ட்ராஜெனகா வாக்ஸேவ்ரியா, மாடர்னா டகேடா ஆகிய தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டாலும் பயண வழிகாட்டுதலில் அனுமதிக்கப்பட்ட 18 நாடுகளில் இந்தியா இடம் பெறவில்லை.

இந்த பட்டியல் தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்படும்.பொது சுகாதாரத்தை பாதுகாப்பதோடு சர்வதேச பயணியர் வருகையை மீண்டும் துவக்கும் போது, நிலையான பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதே பிரிட்டன் அரசின் நோக்கம். எனவே அனைத்து நாடுகளின் தடுப்பூசி சான்றிதழ் அளிக்கும் நடைமுறை, குறைந்தபட்ச அளவுகோலை பூர்த்தி செய்ய வேண்டும்.இந்த சிக்கலை படிப்படியான அணுகுமுறைவாயிலாக களைய, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடன் பிரிட்டன் அரசு பேச்சு நடத்தி வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
24-செப்-202112:56:45 IST Report Abuse
Ramesh Sargam பிரிட்டன் நாட்டின் தற்பொழுது சுகாதார துறை அதிகாரி ஒரு பாக்கிஸ்தான் வம்சாவளி. இந்தியாவை பழிவாங்க வேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில் இப்படி செய்து கொண்டிருக்கிறார். ஆகையால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் அவர்கள், அந்த பாகிஸ்தான் அதிகாரியை அழைத்து எச்சரிக்கை வேண்டும், இந்திய - பிரிட்டன் உறவு பாதிக்க பட கூடாது என்று நினைத்தால்...
Rate this:
Cancel
babu - Nellai,இந்தியா
24-செப்-202111:37:15 IST Report Abuse
babu இப்படி நம் இந்திய மக்களை மதிக்காத இந்த ..களின் நாட்டுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்.அசிங்கமா தெரிய வில்லையா
Rate this:
Cancel
ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் India has to stop air plane services to and from Britain stop giving visas to British nationals whom are coming from any nation either on business or on personal visiy to India
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X