தமிழ்நாடு

குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாக...தேர்தல் அலுவலரிடம் அ.தி.மு.க., - பா.ஜ.,வினர் வாக்குவாதம்

Added : செப் 24, 2021
Share
Advertisement
ரிஷிவந்தியம் ஒன்றியத்தில், 25 ஒன்றிய கவுன்சிலர் மற்றும் 3 மாவட்ட கவுன்சிலர் பதவியிடத்திற்கு போட்டியிட தி.மு.க., - அ.தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ஜ., மற்றும் நாம் தமிழர் கட்சியினர் வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று நடந்தது.பெரியபகண்டை, மையனூர், எகால் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 15வது ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் மனு அளித்த அந்தோணியம்மாள் வீட்டு வரி கட்டவில்லை. இதனால்,
 குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாக...தேர்தல் அலுவலரிடம் அ.தி.மு.க., - பா.ஜ.,வினர் வாக்குவாதம்

ரிஷிவந்தியம் ஒன்றியத்தில், 25 ஒன்றிய கவுன்சிலர் மற்றும் 3 மாவட்ட கவுன்சிலர் பதவியிடத்திற்கு போட்டியிட தி.மு.க., - அ.தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ஜ., மற்றும் நாம் தமிழர் கட்சியினர் வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று நடந்தது.

பெரியபகண்டை, மையனூர், எகால் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 15வது ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் மனு அளித்த அந்தோணியம்மாள் வீட்டு வரி கட்டவில்லை. இதனால், அவரது மனுவை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க., வேட்பாளர் உஷாவின் கணவர் ஜோதிநாதன் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கூறினார். இதனால், தி.மு.க., - அ.தி.மு.க.,வினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.தகவலறிந்த பகண்டைகூட்ரோடு போலீசார் பரிசீலனை நடைபெறும் இடத்தில் கூடியிருந்த அனைத்து கட்சியினரையும் அப்புறப்படுத்தினர்.இந்நிலையில், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 4 மற்றும் 5 வது மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வினர் அளித்த மனுக்களில் சில பக்கங்கள் இல்லை என தேர்தல் உதவி அதிகாரிகள் தெரிவித்தனர்.வேட்புமனு அளித்த போது இருந்த பக்கங்கள் திடீரென காணாமல் போனது எப்படி என அ.தி.மு.க.,வினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தி.மு.க., வினருக்கு சாதகமாக செயல்படுவதாக கூறியும், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் அருணகிரி, தண்டபாணி, துரைராஜ் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பகண்டைகூட்ரோடு மும்முனை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.திருக்கோவிலுார் டி.எஸ்.பி., கங்காதரன் மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க., வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தார்.அப்போது, எவ்வித பதிலையும் தெரிவிக்காமல் மாவட்ட கவுன்சிலருக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வகுமரன் காரில் புறப்பட்டார்.உடன், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வினர் தேர்தல் அலுவலரின் காரை மறித்து, முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். உடன் முற்றுகையில் ஈடுபட்ட அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வை சேர்ந்த 16 பேரை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவியது.5 மாவட்ட கவுன்சிலர்கள்வேட்பு மனுக்கள் தள்ளுபடிரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 3, 4, 5 ஆகிய மூன்று மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்கள் உள்ளன.

இதில் 3வது வார்டு மாவட்ட கவுன்சிலர்பதவிக்கு தி.மு.க., - அ.தி.மு.க., - தே.மு.தி.க., உட்பட 6 பேர் மனு அளித்தனர். அனைவரின் வேட்பு மனுவும்ஏற்றுக் கொள்ளப்பட்டது. 4வது வார்டில், 8 பேர் மனு அளித்திருந்தனர். இதில் அ.தி.மு.க., மாற்று வேட்பாளர் சிவாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 7 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.5வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவியிடத்திற்கு 7 வேட்பு மனுக்கள்அளிக்கப்பட்டிருந்தது.

அதில் அ.தி.மு.க., வேட்பாளர் பிச்சைக்காரன், மாற்று வேட்பாளர் ஜெயா பிச்சைக்காரன், பா.ஜ., குழந்தைவேலு,பா.ம.க., சுப்ரமணியன் ஆகியோரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 3 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X