சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வரதட்சணை கொடுமையால் மருமகள் தற்கொலை: மகனுடன் தலையாரி கைது

Added : செப் 24, 2021
Share
Advertisement
திருமங்கலம் : செக்கானுரணி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் இறந்த வழக்கில் தலையாரி பாண்டி 55, மகன் பிரகாஷ் 27, கைது செய்யப்பட்டனர்.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. திருமங்கலம் தாலுகா ஆ.கொக்குளம் கிராம தலையாரி. இவரது மனைவி ராணியம்மாள் 50, மகன்கள் பிரபாகரன் 29, பிரகாஷ். கடந்த 2019ல் பிரபாகரனுக்கும், மதுரை காளவாசல் கருப்பையா மகள் மாளவிகாவிற்கும் திருமணம் நடந்தது. வரதட்சணையாக 120

திருமங்கலம் : செக்கானுரணி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் இறந்த வழக்கில் தலையாரி பாண்டி 55, மகன் பிரகாஷ் 27, கைது செய்யப்பட்டனர்.

பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. திருமங்கலம் தாலுகா ஆ.கொக்குளம் கிராம தலையாரி. இவரது மனைவி ராணியம்மாள் 50, மகன்கள் பிரபாகரன் 29, பிரகாஷ். கடந்த 2019ல் பிரபாகரனுக்கும், மதுரை காளவாசல் கருப்பையா மகள் மாளவிகாவிற்கும் திருமணம் நடந்தது. வரதட்சணையாக 120 பவுன் நகைகள் மற்றும் ரூ. 10 லட்சம் கொடுத்துள்ளனர். 2020ல் உடல் நலக்குறைவால் பிரபாகரன் இறக்கவே பணம், நகையை பாண்டி தரப்பினர் திருப்பிக் கொடுத்தனர்.

இந்நிலையில் மாளவிகாவை அவரது பெற்றோர் அனுமதியின்றி பாண்டியின் 2வது மகன் பிரகாஷ் திருமணம் செய்தார். கொடுத்த வரதட்சணையை திரும்ப கேட்டு மாளவிகாவை பாண்டி தரப்பினர் வற்புறுத்தினர். இதனால் 70 பவுன் நகைகள் மற்றும் ரூ. 5 லட்சத்தை கருப்பையா கொடுத்துள்ளார்.

ஆனால் மூத்த மகனுக்கு கொடுத்தது போல் பணம் மற்றும் நகையை கேட்டு துன்புறுத்தி வந்ததால், மனமுடைந்த மாளவிகா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆர்.டி.ஓ., அனிதா விசாரித்து உத்தரவிட்டதன் பேரில் பாண்டி மற்றும் பிரகாஷை செக்கானுாரணி போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ராணியம்மாளை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X