பொது செய்தி

இந்தியா

யஷ்ஷுக்கு புதிய ஜோடி யார்?

Added : செப் 24, 2021
Share
Advertisement
நர்தன் இயக்கத்தில், யஷ் நடிப்பில் புதிய படத்துக்கு படக்குழுவினர் ஹீரோயினை தேடி கண்டு பிடித்துள்ளனர். ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ள மாளவிகா மோகன், யஷ்ஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். கே.ஜி.எப்., - 2 படம் வெளியான பின்னரே, புதிய பட வேலைகள் துவங்க வாய்ப்புள்ளது. மாளவிகா மோகனனுக்கு இது முதல் கன்னட படம். படம் பற்றிய மற்ற விஷயங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஜனவரி 8ல் யஷ்

நர்தன் இயக்கத்தில், யஷ் நடிப்பில் புதிய படத்துக்கு படக்குழுவினர் ஹீரோயினை தேடி கண்டு பிடித்துள்ளனர். ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ள மாளவிகா மோகன், யஷ்ஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். கே.ஜி.எப்., - 2 படம் வெளியான பின்னரே, புதிய பட வேலைகள் துவங்க வாய்ப்புள்ளது. மாளவிகா மோகனனுக்கு இது முதல் கன்னட படம். படம் பற்றிய மற்ற விஷயங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஜனவரி 8ல் யஷ் பிறந்த நாளாகும். அதே நாளில் புதிய படத்தின் பெயர், நாயகியை அறிமுகம் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இரட்டை அர்த்த வசனங்கள்!சாண்டல்வுட்டின் முன்னணி நடிகையரின் பட்டியலில், ஹரிப்பிரியாவுக்கு முக்கிய இடம் உள்ளது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது விஜய் பிரசாத் இயக்கும் மெட்ரோமாக்ஸ் படத்தில், இன்சூரன்ஸ் கம்பெனி ஏஜன்டாக ஹரிப்பிரியா நடிக்கிறார். பொதுவாக விஜய் பிரசாத் படங்களில், இரட்டை அர்த்த வசனங்களுக்கு பஞ்சமிருக்காது. இந்த படத்திலும் இது போன்ற வசனங்கள், தாராளமாகவே உள்ளது. இவர் இயக்கிய நீர்தோசே படத்திலும் கூட, அவரே நாயகியாக நடித்திருந்தார். 'லொகேஷன்' தேடுதல் வேட்டை!கன்னடத்துக்கு வேறு மொழி நடிகையர் வருவது, புதிய விஷயமல்ல. இந்த வரிசையில் நைனா கங்கூலி புதிதாக சேர்ந்துள்ளார்.சோஷியல் மீடியாக்களில், கிளாமர் அவதாரம் மூலமாகவே, அனைவரையும் கவர்ந்த இவர், கன்னடத்துக்கு புதியவரே தவிர, திரையுலகுக்கு பழையவர். தெலுங்கு மூலமாக அறிமுகமான இவர், பெங்காலி, இந்தி படங்களில் நடித்தவர். தற்போது பிரணயம் மூலம் கன்னடத்துக்கு வந்துள்ளார். லொகேஷனை தேடி படப்பிடிப்பை துவங்க படக்குழுவினர், தயாராகின்றனர். இது முழுக்க, முழுக்க காதல் கதையாம்.இரண்டாம் பாகம் படம்!விஷ்ணுவர்தன் நடிப்பில், 1984ல் திரைக்கு வந்த, பந்தனா கன்னட திரையுலகில், புதிய சகாப்தத்தை படைத்த படங்களில் ஒன்றாகும். தற்போது படத்தின் அடுத்த பாகம் தயாராகவுள்ளது. இந்த காலகட்டதுக்கு தகுந்தார் போன்று, மாற்றங்களுடன் திரைக்கு கொண்டு வர ஏற்பாடு நடக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய ராஜேந்திரசிங் பாபு, இரண்டாம் பாகத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். படத்திலும் இவரது மகன் ஆதித்யா நாயகனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. இதிலும் கூட சுஹாசினி, ஜெய் ஜெகதீஷும் நடிக்கிறார்களாம். அக்டோபர் 22ல் படப்பிடிப்பு துவங்குகிறதாம்! புது முகத்துக்கு வாய்ப்பு!நடிகர் துருவா சர்ஜா நடிக்கும், மார்ட்டின் திரைப்படத்துக்கு இன்னும் நாயகி கிடைக்கவில்லை. இதுவரை எந்த படத்திலும் நடிக்காத புதுமுகத்தை, படக்குழுவினர் தேடுகின்றனர். நடிப்பில் ஆர்வம் உள்ள, புதுமுகத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்பது படக்குழுவினரின் நோக்கம். நடிக்க விருப்பமுள்ளோர், தொடர்பு கொள்ளும்படி, இ -- மெயில் முகவரியும் கொடுத்துள்ளனர். நாயகி தேர்வு செய்யப்படவில்லை என்றாலும், படப்பிடிப்பு நடக்கிறது. ஹைதராபாத்தில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் தற்போது பெங்களூரில் படப்பிடிப்பை நடத்துகின்றனர்.மும்மொழிகளில் 'பிசி!' மங்களூரை சேர்ந்த சிலர் ஒன்று சேர்ந்து புதிதாக படம் தயாரிக்கின்றனர். இப்படத்துக்கு, நிம்மெல்லர ஆசிர்வாதா என பெயர் சூட்டியுள்ளனர். மாறுபட்ட கதையம்சம் கொண்டது. படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துள்ளது. இதில், பாயல் ராதா கிருஷ்ணா நாயகியாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே 'பின்னா' வில் நடித்திருந்தார். புதிய படத்திலும் கிளாமர் தோற்றத்தில் கல்லுாரி மாணவியாக தோன்றுகிறார். இவருக்கு கன்னடம் மட்டுமின்றி, தெலுங்கு, தமிழிலும் பிசியான நடிகை. மிரட்டும் கதாபாத்திரம்!நடிகை ஸ்ருதி, பஜ்ரங்கி - 2 திரைப்படத்தில், இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். சில நாட்களுக்கு முன் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இதில் ஸ்ருதியின் கெட்டப், மிரட்டலாக உள்ளது. நெற்றியில் பெரிதாக குங்குமம், நெருப்பை கக்கும் கண்கள், கையில் சுருட்டு, விரித்த தலைமுடி என, அவரது தோற்றமே அசத்தலாக உள்ளது. இதுவரை மென்மையான கதாபாத்திரங்களில் ரசிகர்களை கவர்ந்த இவர், முதன்முறையாக மக்களை மிரட்டும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது நடிப்பை சிவராஜ்குமார் பாராட்டினாராம்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X