பொது செய்தி

இந்தியா

சீக்ரெட் சிங்காரம்

Added : செப் 24, 2021
Share
Advertisement
பஞ்., அலுவலகத்தில் பி.எம்., படம்! ராம்நகர் கிராம பஞ்சாயத்து புல்லுக்கட்டு காரங்களோட கன்ட்ரோலில் இருந்து வருகுது. பஞ்சாயத்து ஆபிசில், 'மாஜி' பிரதமரோட படம் மட்டுமே இருந்தது. நாட்டின் பிரதமரோட படத்தையும் வைக்க வேணும்னு அவர் படத்தை, அவரோட பர்த் டே நாளில் பூக்காரங்க மாட்டிட்டாங்க.'மாஜி' பி.எம்., படம் பக்கத்திலேயே தற்போதைய பி.எம்., படமும் இருக்க வேணும்னு பஞ்சாயத்து

பஞ்., அலுவலகத்தில் பி.எம்., படம்! ராம்நகர் கிராம பஞ்சாயத்து புல்லுக்கட்டு காரங்களோட கன்ட்ரோலில் இருந்து வருகுது. பஞ்சாயத்து ஆபிசில், 'மாஜி' பிரதமரோட படம் மட்டுமே இருந்தது. நாட்டின் பிரதமரோட படத்தையும் வைக்க வேணும்னு அவர் படத்தை, அவரோட பர்த் டே நாளில் பூக்காரங்க மாட்டிட்டாங்க.'மாஜி' பி.எம்., படம் பக்கத்திலேயே தற்போதைய பி.எம்., படமும் இருக்க வேணும்னு பஞ்சாயத்து பூக்கட்சி உறுப்பினர்கள் கவுரவத்தை நிலை நாட்டினாங்க. ஆயினும், நிர்வாக அதிகாரம் உள்ள புல்லுக்கட்டுக்காரங்க, படத்தை அகற்றணும்னு சொல்ல முடியல. வேண்டா வெறுப்பா, மவுனமாகிட்டாங்க.சிறு சலசலப்பை ஏற்படுத்தினாங்க. அசரல. படம் வைக்கிறவங்க முறையா ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமேன்னு புல்லுக்கட்டு கிராம தலைவரு மழுப்பினாராம். இருந்தாலும், பூக்காரங்க அத்துமீறுறாங்கன்னு புல்லுக்கட்டு உறுப்பினர்கள் பேசிக்கிட்டாங்களாம்.அரசியல்வாதி 'பார்ட்னர்!'துமகூரு மாவட்ட மேம்பாலம் அருகே ஆணுறை குவியல் கண்டெடுத்தாங்க. அவை எல்லாமே லாட்ஜ் ஒன்றில் பயன்படுத்தியதை என்பதை காக்கிக்காரங்க கண்டு பிடிச்சாங்க.அந்த பலான லாட்ஜில் சுரங்க அறைங்க ஏற்படுத்தி, அழகிகளை விருந்தாக்கும் தொழில் நடத்தி வருவது உறுதியாச்சு. அதன் ஓனர் பேரில் 'கேஸ் புக்' செய்தாங்க.இந்த லாட்ஜில் சமூக விரோத செயலை செய்ய தேசியக் கட்சிக்காரரு தான் இதன் பின் பலமா, பார்ட்னரா இருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்குதாம்.நீண்ட நாளாகவே இந்த பலான தொழிலை இவங்க நடத்தி வந்திருக்காங்க. காக்கிக்காரங்க ஆக் ஷன் எடுக்க முன் பின் யோசிக்கிறாங்களாம்!நெஞ்சை உருக்கிய கண்ணீர்! பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பற்றி அசம்பிளியில், பெண்கள் எல்லாருமே சரவெடியா வெடிச்சாங்க. கோல்டு சிட்டி அசம்பிளி மேடம் உள்ளங்களை உருக வைக்க கண்ணீரையும் சிந்தினாங்க. மனித மிருகங்களை அடக்கியே தீரனும்னு சீறினாங்க.ஆண் உறுப்பினர்கள், மகளிரின் நியாயமான வருத்தங்களை மனதில் பதித்துக் கொண்டாங்க. கட்சிகளை இதில் காட்டிக்கொள்ளாமல் மனிதம், அதன் புனிதம் கெட்டு போவதை யாராலும் ஜீரணிக்க முடியல. சட்டம் அதன் கடமையை செய்யனும் என்பதே ஒருமித்த கருத்தாக ஒலித்தது.மரியாதை இல்லையாம்!வேலி தாண்டும் வெள்ளாடு முதல்வரா இல்லாட்டியும் பெயருக்கு முன்னாடி 'சி.எம்.,'ன்னு இன்ஷியலை வைத்துக்கொண்டு இருக்கிற, சகல கலா பேச்சாளரான 'மாஜி' சென்ட்ரல் மினிஸ்டர், தற்போதைய 'கை' எம்.எல்.சி.. இவர் புல்லுக்கட்டை புகழ்ந்துப் பேசி வருகிறார். இவர் இருக்கும் கட்சியில் எதிர்ப்பார்க்கும் மரியாதை கெடைக்கலையாம். அதனால் மாநில கட்சி தான் தேவை என்கிறார். இவரது பார்வை, நடை எல்லாமே புல்லுக்கட்டு நோக்கி இருக்குது. விரைவில் இடம் வேலி தாண்டும் வெள்ளாடாக தாவப்போறுதா தெரியிது. புல்லுக்கட்டு மூலம் டெல்லி பாலிடிக்ஸ் நடத்த விரும்புகிறாராம்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X