பொது செய்தி

இந்தியா

ஊடகங்களுக்கு கசியும் தகவல்கள்; அலறும் 'ஆப்பிள்' நிறுவனம்

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: 'ஆப்பிள்' நிறுவனத்தை பொறுத்தவரை, சந்தையில் நிலவும் போட்டிகளை சமாளித்து வருவது ஒருபுறமிருக்க, இன்னொரு பக்கம் நிறுவன செயல்பாடுகள் குறித்த தகவல்கள் ஊடகங்களுக்கு கசிவதும் ஒரு பெரிய சவாலாக உருவெடுத்து உள்ளது.ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக், ஊழியர்களுக்கு கடுமையான ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளார்.அதில், ஊடகங்களுக்கு தகவல்களை கசிய
Apple, iphone, leaks

புதுடில்லி: 'ஆப்பிள்' நிறுவனத்தை பொறுத்தவரை, சந்தையில் நிலவும் போட்டிகளை சமாளித்து வருவது ஒருபுறமிருக்க, இன்னொரு பக்கம் நிறுவன செயல்பாடுகள் குறித்த தகவல்கள் ஊடகங்களுக்கு கசிவதும் ஒரு பெரிய சவாலாக உருவெடுத்து உள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக், ஊழியர்களுக்கு கடுமையான ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளார்.அதில், ஊடகங்களுக்கு தகவல்களை கசிய விடும் ஊழியர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்து உள்ளார்.


latest tamil news


அண்மையில், 'வெர்ஜ்' எனும் ஊடகம், நிறுவனத்தின் சுற்றறிக்கை ஒன்றை பொது வெளியில் அப்படியே வெளியிட்டது.இதற்கு முன்னரும் அலுவலகத்தினுள் நடைபெறும் கலந்துரையாடல்கள் வெளியே கசியவிடப்பட்டுள்ளன.தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் நாள், அலுவலக மீட்டிங்குகள் என பல தகவல்கள் வெளியே கசிவதை அடுத்து, டிம் குக் இவ்வாறு எச்சரித்திருக்கிறார்.

மேலும், இத்தகைய ரகசிய தகவல்களை கசியவிடுவதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்து உள்ளார்.ஆப்பிள் நிறுவன தயாரிப்பான 'ஐபோன் 13' குறித்த தகவல்கள், அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன் வெளியே கசிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
24-செப்-202108:24:47 IST Report Abuse
Kasimani Baskaran முன்னர் சிறு தவறு என்றால்க்கூட விபி அளவுள்ளவர்களைக்கூட நிமிடத்தில் தூக்கிவிடுவார்கள். இப்பொழுது அதுவெல்லாம் கிடையாது.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
24-செப்-202107:56:42 IST Report Abuse
duruvasar இது இன்டேர்னல் பாலிடிக்ஸ். ஆனால் பொது வெளியிலேயே பொய் செய்திகளை கசியவிடுவதற்கென்றே தமிழ்நாட்டில் ஒரிரு தமிழ் மற்றும் ஆங்கில நாளேடுகள் உள்ளன. கையும் களவுமாக பிடிபடும் போது மன்னிச்சிடுங்க கோபால்னு காலில் விழுந்து ராம் ராம்னு சொல்லி தப்பபிச்சுடுவானுங்க.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
24-செப்-202105:33:32 IST Report Abuse
NicoleThomson பணியிடமாற்றம் எங்கூரு காவல்துறைக்கு மாத்திரம் தான் மிகப்பெரிய தண்டனை என்று நினைத்தேன் , உங்க அலுவலகத்திலும் அந்த பெரிய தண்டனையை கொடுத்திடுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X