பொது செய்தி

இந்தியா

தசரா மற்றும் தீபாவளியை முன்னிட்டு,கூடுதலாக 1,000 பஸ்களை இயக்க கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு

Added : செப் 24, 2021
Share
Advertisement
பெங்களூரு-தசரா மற்றும் தீபாவளியை முன்னிட்டு, பயணியரின் வசதிக்காக பெங்களூரிலிருந்து வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு கூடுதலாக 1,000 பஸ்களை இயக்க கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு செய்துள்ளது.இது குறித்து கே.எஸ்.ஆர்.டி.சி., வெளியிட்டுள்ள அறிக்கை:முக்கியமான பண்டிகை நாட்களில் பயணியர் எண்ணிக்கை அதிகமிருக்கும். தசராவுக்காக 1,000 பஸ்கள்; தீபாவளி நேரத்தில் 1,000 கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.

பெங்களூரு-தசரா மற்றும் தீபாவளியை முன்னிட்டு, பயணியரின் வசதிக்காக பெங்களூரிலிருந்து வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு கூடுதலாக 1,000 பஸ்களை இயக்க கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு செய்துள்ளது.இது குறித்து கே.எஸ்.ஆர்.டி.சி., வெளியிட்டுள்ள அறிக்கை:முக்கியமான பண்டிகை நாட்களில் பயணியர் எண்ணிக்கை அதிகமிருக்கும். தசராவுக்காக 1,000 பஸ்கள்; தீபாவளி நேரத்தில் 1,000 கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். தசராவை முன்னிட்டு அக்டோபர் 13 முதல் 21 வரை, தீபாவளி நேரத்தில் அக்டோபர் 29 முதல் நவம்பர் 7 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ்கள் பெங்களூரிலிருந்து தர்மஸ்தலா, குக்கே சுப்ரமண்யா, ஷிவமொகா, ஹாசன், மங்களூரு, குந்தாபுரா, சிருங்கேரி, ஹொரநாடு, மைசூரு, மடிகேரி, தாவணகரே, ஹூப்பள்ளி.தார்வாட், பெலகாவி, விஜயபுரா, கோகர்ணா, சிர்சி, கார்வார், ராய்ச்சூர், கலபுரகி, பல்லாரி, கொப்பல், யாத்கிர், பீதர் என பல இடங்களுக்கு செல்லும்.திருப்பதி, விஜயவாடா, ஹைதராபாத், திருவனந்தபுரம், கோட்டயம், சென்னை, கோயமுத்துார், பூனா, பனாஜி உட்பட பல இடங்களுக்கும் கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். பண்டிகையை முன்னிட்டு கூடுதல் பஸ் இயக்கப்பட்டாலும், பயண கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது. கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் இணையதளம், கர்நாடகா மற்றும் மற்ற மாநிலங்களில் உள்ள புக்கிங் கவுன்டர்களில் டிக்கெட் முன் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X