பொது செய்தி

இந்தியா

பெங்களூரின் கழிவுகளுடன் செல்லும் அர்க்காவதி ஆற்றை சீரமைப்பு

Added : செப் 24, 2021
Share
Advertisement
பெங்களூரு-பெங்களூரின் கழிவுகளுடன் செல்லும் அர்க்காவதி ஆற்றை சீரமைக்க காலம் கூடி வந்துள்ளது. ஆற்றை சீரமைக்க நகர குடிநீர் வினியோகம், வடிகால் வாரியம் 20.50 கோடி ரூபாய் செலவில், திட்டம் வகுத்துள்ளது. ஒரு காலத்தில், அர்க்காவதி ஆறு பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு, உயிர்நாடியாக இருந்தது.ஆனால் இன்று, கர்நாடகாவின் அசுத்தமடைந்த ஆறுகளில் ஒன்று என பெயர்

பெங்களூரு-பெங்களூரின் கழிவுகளுடன் செல்லும் அர்க்காவதி ஆற்றை சீரமைக்க காலம் கூடி வந்துள்ளது. ஆற்றை சீரமைக்க நகர குடிநீர் வினியோகம், வடிகால் வாரியம் 20.50 கோடி ரூபாய் செலவில், திட்டம் வகுத்துள்ளது. ஒரு காலத்தில், அர்க்காவதி ஆறு பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு, உயிர்நாடியாக இருந்தது.ஆனால் இன்று, கர்நாடகாவின் அசுத்தமடைந்த ஆறுகளில் ஒன்று என பெயர் பெற்றுஉள்ளது. இந்த ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுத்து, ஆற்றை சீமைக்கும்படி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.இதன்படி நகர குடிநீர் வினியோகம், வடிகால் வாரியம், 20.50 கோடி ரூபாய் செலவில் திட்டம் வகுத்துள்ளது. திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசின் அனுமதியும் கிடைத்துள்ளது. எனவே திட்டத்தை செயல்படுத்த டெண்டர் கோரப்பட்டுள்ளது. இரண்டு முறை டெண்டர் அழைத்தும் ஒப்பந்ததாரர்கள் பங்கேற்கவில்லை. சில கடினமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்ததே, இதற்கு காரணம். மூன்றாவதாக அழைக்கப்பட்ட டெண்டரில் இரண்டு ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றுள்ளனர். டெண்டர் முடிவானதும் பணிகளை துவக்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X