பொது செய்தி

இந்தியா

சுற்றுலா பயணியர் அதிகரிப்பு

Added : செப் 24, 2021
Share
Advertisement
ராம்நகர்-கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பித்திருந்த தடை உத்தரவை ராம்நகர் மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளதால் சுற்றுலா பயணியரின் வருகை அதிகரித்து உள்ளது.ஒன்றரை மாதங்களுக்கு முன் பெங்களூரில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருந்தது. மூன்றாவது அலை பீதியும் இருந்தது. எனவே இங்கிருந்து வருவோரை ராம்நகர் மாவட்ட நிர்வாகம் கண்காணித்தது. வார இறுதி நாட்களில்,

ராம்நகர்-கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பித்திருந்த தடை உத்தரவை ராம்நகர் மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளதால் சுற்றுலா பயணியரின் வருகை அதிகரித்து உள்ளது.

ஒன்றரை மாதங்களுக்கு முன் பெங்களூரில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருந்தது. மூன்றாவது அலை பீதியும் இருந்தது. எனவே இங்கிருந்து வருவோரை ராம்நகர் மாவட்ட நிர்வாகம் கண்காணித்தது. வார இறுதி நாட்களில், பெங்களூலிருந்து, ராம்நகருக்கு வருவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.இதனால் கொரோனா பரவும் அபாயம் இருந்ததால் வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களுக்கு, சுற்றுலா பயணியர் வருகைக்கு ராம்நகர் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. தற்போது பெங்களூரு மட்டுமின்றி ராம்நகரிலும் தொற்று குறைந்துள்ளது. எனவே மாவட்ட அளவில், பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன்,கூட்டம் நடத்திய ராம்நகர் மாவட்ட கலெக்டர், தடை உத்தரவை திரும்ப பெற்றுள்ளார்.தடை நீங்கியதால் ராம்நகருக்கு சுற்றுலை பயணியர் படையெடுக்கின்றனர்.மலைப்பகுதி, நீர் வீழ்ச்சிகள், ஏரிகள், கோவில்கள், இயற்கை எழில் மிகுந்த இடங்கள், வனவிலங்கு சரணாலயம் உட்பட பல சுற்றுலா தலங்களில் கூட்டம் அலை மோதுகிறது. வெறிச்சோடி கிடந்த இடங்கள் களை கட்டியுள்ளன. வியாபாரம், வர்த்தகம் சூடு பிடித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X