பொது செய்தி

இந்தியா

வருமான வரி இணைய தளத்தை அணுகுவதில் தொடரும் சிரமங்கள்!

Added : செப் 24, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: வருமான வரி இணைய தளத்தை அணுகுவதில், சிலர் தொடர்ந்து சிரமங்களை அனுபவித்து வருவதாக, 'இன்போசிஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இப்பிரச்னைகளை களைந்து, பயனர் அனுபவத்தை மேலும் எளிதாக்க, வருமான வரி துறையினருடன் இணைந்து விரைவாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.வருமான வரி தாக்கலை எளிமையாக்கும் வகையில், புதிய இணையதளம் கடந்த ஜூன் மாதம் துவங்கப்பட்டது.
Infosys, Income Tax portal, IT portal

புதுடில்லி: வருமான வரி இணைய தளத்தை அணுகுவதில், சிலர் தொடர்ந்து சிரமங்களை அனுபவித்து வருவதாக, 'இன்போசிஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இப்பிரச்னைகளை களைந்து, பயனர் அனுபவத்தை மேலும் எளிதாக்க, வருமான வரி துறையினருடன் இணைந்து விரைவாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

வருமான வரி தாக்கலை எளிமையாக்கும் வகையில், புதிய இணையதளம் கடந்த ஜூன் மாதம் துவங்கப்பட்டது. புதிய இணைய தளத்தை உருவாக்குவதற்கான பணிகள் இன்போசிஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. ஆனால், புதிய இணையதளம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தவுடன், லட்சக்கணக்கான பயனர்களால் அதில் உள்நுழைய முடியவில்லை. மேலும், வருமான வரித் தாக்கலில் ஏராளமான சிக்கல்களையும் சந்தித்தனர். இதையடுத்து, இப்பிரச்னைகளை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.


latest tamil newsஇதன் காரணமாக தொடர்ச்சியான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும், நிலைமை முழுமையாக சரியாகவில்லை. பலர் இன்னும் வரி தாக்கல் செய்வதில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து இன்போசிஸ் வெளியிட்ட அறிக்கையில், கடந்த சில வாரங்களாக பயனர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகவும், பயனர்களின் சிரமங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா
25-செப்-202114:31:34 IST Report Abuse
K E MUKUNDARAJAN ரவிச்சந்திரன் ஸ்ரீராம் சுதர்சனம் சிவகுமார் போன்றவர்களின் ரிட்டர்ன் ஏற்கப்பட்டிருக்கலாம். அவர்கள் அனைவரும் என் வீட்டுக்கு வருமாறு அழைக்கிறேன். லாகின் செய்து டாஷ்போர்டய் கிளிக் செய்தால் அதன் பிறகு மூவ் ஆவதில்லை. காலையிலிருந்து போராடிக்கொண்டு இருக்கிறேன்.
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
24-செப்-202113:44:55 IST Report Abuse
r ravichandran I have filed my return without any problem
Rate this:
Cancel
K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா
24-செப்-202113:17:40 IST Report Abuse
K E MUKUNDARAJAN போன வருடத்திய மென்பொருள் அருமையாக இருந்தது. எந்த தகவலானாலும் கேட்டவுடன் கிடைத்தது. இப்போது டாஷ் போர்ட் எப்போதும் வேலை செய்வதில்லை. அதனால் மேற்கொண்டு உள்ளே செல்ல முடியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X