போதைப்பொருள் விற்க முயன்ற இரண்டு பஞ்சாபியர்களை போலீசார் கைது

Added : செப் 24, 2021
Share
Advertisement
பாகல்கோட்--கல்லுாரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்க முயன்ற இரண்டு பஞ்சாபியர்களை போலீசார் கைது செய்தனர்.பாகல்கோட் பேளகி நகரில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக கலால் துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து பேளகி சதுக்கம் இன்ஸ்பெக்டர் சதாசிவ கூர்கி தலைமையில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. அதில், சந்தேகத்திற்கிடமான முறையில் இரண்டு பஞ்சாபியர்கள் பையுடன்

பாகல்கோட்--கல்லுாரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்க முயன்ற இரண்டு பஞ்சாபியர்களை போலீசார் கைது செய்தனர்.பாகல்கோட் பேளகி நகரில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக கலால் துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து பேளகி சதுக்கம் இன்ஸ்பெக்டர் சதாசிவ கூர்கி தலைமையில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. அதில், சந்தேகத்திற்கிடமான முறையில் இரண்டு பஞ்சாபியர்கள் பையுடன் நடமாடுவதை பார்த்தனர். அவர்களை பிடித்து சோதனை செய்தனர். அதில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான அபின் என்ற போதைப்பொருள் இருந்தது. இதை பறிமுதல் செய்த போலீசார் விசாரித்தனர். இருவரும் ஒரு வாரமாக 10 கிலோ போதைப்பொருளுடன், இங்குள்ள கார், வேன் டிரைவர்களுக்கு விற்பனை செய்துஉள்ளனர். கல்லுாரி மாணவர்களுகளை குறி வைத்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இருவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X