நண்பர்களே மென்பொறியாளரை கடத்தி, இரண்டு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டல்

Added : செப் 24, 2021
Share
Advertisement
பெங்களூரு-பணத்தாசையால் நண்பர்களே மென்பொறியாளரை கடத்தி, இரண்டு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டினர். அவர்கள் தமிழகத்தில் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு கோரமங்களாவில் வசிக்கும் மென்பொறியாளர் வினித் வர்த்தன், சில மாதங்களுக்கு முன் சொந்தமாக நிறுவனம் துவங்கி, வேறொரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இவரது நண்பர்கள் பிரசாந்த், சந்தோஷ். இவர்களும்

பெங்களூரு-பணத்தாசையால் நண்பர்களே மென்பொறியாளரை கடத்தி, இரண்டு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டினர். அவர்கள் தமிழகத்தில் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு கோரமங்களாவில் வசிக்கும் மென்பொறியாளர் வினித் வர்த்தன், சில மாதங்களுக்கு முன் சொந்தமாக நிறுவனம் துவங்கி, வேறொரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இவரது நண்பர்கள் பிரசாந்த், சந்தோஷ். இவர்களும் மென்பொறியாளர்கள். வினித் வர்த்தன் நிறுவனம் வைத்துள்ளதால், அவரை கடத்தி பணம் பறிக்க நண்பர்கள் திட்டம் தீட்டினர். இதன்படி ஆகஸ்ட் 19ல், பார்ட்டி நடத்துவதாக நம்ப வைத்து வினித்தை, காரில் தமிழகத்துக்கு கடத்தி சென்று, ரகசிய இடத்தில் அடைத்து வைத்தனர். இரண்டு நாட்களாகியும் மகன் வீடு திரும்பாததால் பீதியடைந்த பெற்றோர், கோரமங்களா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.இதற்கிடையில் கடத்தல்காரர்கள், வாட்ஸ் ஆப் மூலம் வினித் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, இரண்டு கோடி ரூபாய் கேட்டு மிரட்டினர். சிறப்பு படை அமைத்து, விசாரணையை துவங்கிய போலீசார், வினித்தின் நண்பர் பிரசாந்த், வாடகைக்கு கார் பெற்றது தெரிந்தது. கார் உரிமையாளரை வரவழைத்து விசாரித்து, பதிவு எண்ணை தெரிந்து கொண்டனர்.அந்த கார், எலக்ட்ரானிக் சிட்டி சுங்கச்சாவடியை கடந்து சென்றது, கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் தெரிந்தது. அதன்பின் விசாரணையை தீவிரப்படுத்தி, கடத்தல்காரர்கள் தமிழகத்தில் இருப்பதை தெரிந்து கொண்டனர்.கர்நாடகா போலீசாரின் இரண்டு குழுக்கள், சென்னை சென்று, 'மொபைல் லொகேஷனை' வைத்து, கடத்தல்காரர்கள் தங்கிய ஓட்டலை கண்டுப்பிடித்து, அவர்களை கைது செய்தனர். வினித்தை மீட்டனர்.மென்பொறியாளரை கடத்தியவர்களை துரிதமாக செயல்பட்டு கைது செய்த போலீசாருக்கு, கடத்தப்பட்டவரின் உறவினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X