பொது செய்தி

இந்தியா

விவசாயிகள் ஒன்றிணைந்து சாலையை சீரமைப்பு

Added : செப் 24, 2021
Share
Advertisement
ஹாவேரி-பல ஆண்டுகளாக வலியுறுத்தியும், அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் செய்ய வேண்டிய பணியை, 70 விவசாயிகள் ஒன்றிணைந்து, இரண்டு லட்சம் ரூபாய் செலவழித்து, 1.5 கி.மீ., சாலையை சீரமைத்து, கரியை பூசியுள்ளனர். முதல்வர் மாவட்டம் இது, முதல்வர் பசவராஜ் பொம்மை சொந்த மாவட்டம் என்பது கவலைக்குரிய விஷயம்.ஹாவேரி நகரின் பழைய பி.பி.சாலையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை - 48 ஐ இணைக்கும் சாலையில்

ஹாவேரி-பல ஆண்டுகளாக வலியுறுத்தியும், அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் செய்ய வேண்டிய பணியை, 70 விவசாயிகள் ஒன்றிணைந்து, இரண்டு லட்சம் ரூபாய் செலவழித்து, 1.5 கி.மீ., சாலையை சீரமைத்து, கரியை பூசியுள்ளனர். முதல்வர் மாவட்டம் இது, முதல்வர் பசவராஜ் பொம்மை சொந்த மாவட்டம் என்பது கவலைக்குரிய விஷயம்.ஹாவேரி நகரின் பழைய பி.பி.சாலையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை - 48 ஐ இணைக்கும் சாலையில் புற்கள், செடி, கொடிகள் வளர்ந்து சாலை காணாமல் போன கதையாக இருந்தது.இந்த வழியில் தான் பல ஆண்டுகளாக, டிராக்டர், மாட்டு வண்டி, பைக் மூலம் விவசாயிகள் சென்று வந்தனர்.சாலையை சரி செய்யும்படி, கிராம பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து, தாசில்தார், எம்.எல்.ஏ., என பலரிடம் முறையிட்டனர். எந்த பயனும் இல்லை.இனி அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் நம்பி பயனில்லை என்ற முடிவுக்கு விவசாயிகள் வந்தனர். சாலை சரிப்படுத்த 2 லட்சம் ரூபாய் தேவை. அந்த பணத்தை, 70 விவசாயிகள் ஒன்றிணைந்து, அவர்களால் முடிந்த அளவுக்கு, 2,000 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை சொந்த பணம் செலவழித்து தற்போது, 1.5 கி.மீ., சாலையை சீரமைத்துள்ளனர்.விவசாயிகளுக்கு, ஒப்பந்ததாரர் சுதாகர் ராய்க்கர் என்பவர், ஜே.சி.பி., வாகனம், லாரியை வழங்கினார். இதையறிந்த மக்கள் பிரதிநிதிகள், விவசாயிகள் முகத்தில் எப்படி முழிப்பது என்று திணறுகின்றனர்.முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலைமை என்பது தான் கவலை அளிப்பதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X