பொது செய்தி

இந்தியா

அரசின் சேவைகள்,கிராம பஞ்சாயத்து மூலம், மக்களின் வீட்டு வாசலுக்கு கொண்டு சேர்க்க, திட்டம்

Added : செப் 24, 2021
Share
Advertisement
பெங்களூரு-''அரசின் சேவைகள்,கிராம பஞ்சாயத்து மூலம், மக்களின் வீட்டு வாசலுக்கு கொண்டு சேர்க்க, திட்டம் வகுக்கப்பட்டுள்ளது,'' என, முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். கிராம அபிவிருத்தி, பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில், பெங்களூரு விதான்சவுதாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அம்ருத் திட்டத்தை முதல்வர் பசவராஜ் பொம்மை துவக்கி வைத்தார்.பின் அவர் பேசியதாவது:கிராமப்புற

பெங்களூரு-''அரசின் சேவைகள்,கிராம பஞ்சாயத்து மூலம், மக்களின் வீட்டு வாசலுக்கு கொண்டு சேர்க்க, திட்டம் வகுக்கப்பட்டுள்ளது,'' என, முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். கிராம அபிவிருத்தி, பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில், பெங்களூரு விதான்சவுதாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அம்ருத் திட்டத்தை முதல்வர் பசவராஜ் பொம்மை துவக்கி வைத்தார்.பின் அவர் பேசியதாவது:கிராமப்புற மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், கிராம பஞ்சாயத்துகள் மூலம், மக்களின் வீட்டு வாசலுக்கு கொண்டு செல்லும் திட்டம், ஐந்து மாவட்டங்களில், ஜனவரி 26ல் சோதனை முறையில் செயல்படுத்தப்படும். இது வெற்றியடைந்தால் மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும். மக்கள் வருவது தவிர்ப்புதிட்டத்தை துவக்க கிராம அபிவிருத்தித்துறை தயாராக வேண்டும். 'சந்தியா சுரக்ஷா' பென்ஷன், மாத உதவித்தொகை உட்பட அனைத்து திட்டங்களும், மக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்ல வேண்டும். அரசு அலுவலகங்களுக்கு மக்கள் வருவதை தவிர்க்க வேண்டும். அரசின் நோக்கம் மக்களை சுற்றிலும் அபிவிருத்தி இடம் பெற வேண்டும்; அபிவிருத்தியை சுற்றிலும் மக்கள் இருக்க வேண்டும். இந்த தத்துவங்கள் மூலம், திட்டம் வகுத்தால் அரசின் நோக்கம் வெற்றியடையும்.மக்களுக்காக திட்டங்கள் வர வேண்டும். இதற்காகவே அம்ருத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தேர்ந்தெடுத்த 750 கிராம பஞ்சாயத்துகளில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த பஞ்சாயத்துகளின் அபிவிருத்திக்கு, 2,300 கோடி ரூபாய் செலவிடப்படும். திட்டம் வகுத்து, நிதியாண்டு இறுதிக்குள், 'அம்ருத்' திட்டத்தை வெற்றிகரமாக்கினால் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும். அனைத்து கிராம பஞ்சாயத்துக்கும் தலா 3 கோடி ரூபாய் செலவாகும். நேர்மையாக பணியாற்றினால் முன் மாதிரி கிராமங்களாகும். ஜலஜீவன் மிஷன் திட்டத்தில், 2,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. வீடு வீடாக குழாய் மூலம் குடிநீர் வழங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.750 சங்கங்கள் அமைப்புபிரதமரின் விருப்பப்படி விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க 750 சங்கங்கள் அமைக்கப்படும். பொருளாதாரம், சமுதாயம், கல்வி ரீதியில் அபிவிருத்தியடைந்தால் நாடும் அபிவிருத்தியடையும். கிராம மக்களின் வாழ்க்கையும் மேம்படும். மக்களின் பங்களிப்பு இருந்தால், ஜனநாயகம் வெற்றியடையும். ஸ்த்ரி சக்தி சங்கங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்திகளுக்கு, மார்க்கெட்டிங் ஏற்படுத்த வேண்டும்.எஸ்.சி., - எஸ்.டி., சிறுபான்மையினர் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டால் பொருளாதாரம் வலுப்பெறும். இதற்காக கூட்டுறவு சங்கங்கள் மூலம் சிறப்பு திட்டம் வகுக்கப்படும். கிராம சுவராஜ் கனவு 'நரேகா' திட்டத்தின் கீழ் பள்ளிகளை பழுது பார்க்க உதவி, பிரதமர் கிராம சடக் திட்டத்தின் கீழ், கிராமப்புற சாலைகளின் அபிவிருத்திக்கு, நிதியுதவி வழங்கும்படி, மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கிராம சுவராஜ் கனவு நனவாக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.மத்திய கிராம அபிவிருத்தித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியதாவது:கர்நாடகாவில் செயல்படுத்தப்பட்ட அம்ருத் திட்டம், வரும் நாட்களில், நாட்டுக்கு முன் மாதிரியாக இருக்கட்டும். திட்டம் வெற்றியடைந்தால் நாடு முழுவதும் விஸ்தரிக்கப்படும். அம்ருத் திட்டம் மிக சிறப்பான திட்டமாகும். காந்தி விருப்பத்தை நிறைவேற்ற மாநில அரசு உறுதியாக அடியெடுத்து வைத்துள்ளது. இ -- நுாலகம் சிறப்பானது. 13வது நிதி ஆயோக் விட, 1வது நிதி ஆயோக்ல், மூன்று மடங்கு அதிகமான நிதி வழங்கப்பட்டது. மத்திய அரசு அளவில், கர்நாடகாவுக்கு சிறப்பான அந்தஸ்து உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X