பொது செய்தி

இந்தியா

போலீஸ் துறையில் நடக்கும் நிதி முறைகேடுகளை சகிக்க முடியாது.

Added : செப் 24, 2021
Share
Advertisement
பெங்களூர-''போலீஸ் துறையில் நடக்கும் நிதி முறைகேடுகளை சகிக்க முடியாது. யார் தவறு செய்தாலும் சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்தார்.கர்நாடக சட்டமேலவை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:பா.ஜ., -- சுனில் சுப்ரமண்யா: குடகு மாவட்டத்தில், போலீஸ் துறை சார்பில் கருவூலத்துக்கு கட்ட வேண்டிய பணம்,

பெங்களூர-''போலீஸ் துறையில் நடக்கும் நிதி முறைகேடுகளை சகிக்க முடியாது. யார் தவறு செய்தாலும் சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்தார்.கர்நாடக சட்டமேலவை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:பா.ஜ., -- சுனில் சுப்ரமண்யா: குடகு மாவட்டத்தில், போலீஸ் துறை சார்பில் கருவூலத்துக்கு கட்ட வேண்டிய பணம், கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அரக ஞானேந்திரா: குடகு மாவட்ட போலீஸ் அலுவலகத்தில், 16.96 லட்சம் ரூபாய் தவறாக பயன்படுத்தப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து எஸ்.பி., ஆய்வு செய்த போது, 8.40 லட்சம் ரூபாய் தவறாக பயன்படுத்தப்பட்டது உறுதியானது. சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள், பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வரும் நாட்களில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பா.ஜ., --- விஸ்வநாத்: பெங்களூரின் கே.எஸ்.ஆர்.பி.,யின் கமான்டென்ட் முதலாவது படையில் 27 லட்சத்து 55 ஆயிரத்து 650 ரூபாய் தவறாக பயன்படுத்தப்பட்டது. அமைச்சர்: உணவு, சிற்றுண்டி வழங்கும் மெஸ் மற்றும் உணவகத்தில் 2010 முதல் 2015 வரை 10 லட்சத்து 32 ஆயிரத்து 765 ரூபாய் தவறாக பயன்படுத்தப்பட்டதாக, இந்திய கட்டுப்பாட்டாளரின் தணிக்கை அறிக்கையளித்துள்ளது. கே.எஸ்.ஆர்.பி.,யின் 9வது படையின், கமான்டென்ட் விசாரணை நடத்தினார். டெபுடி கமான்டண்ட் ரூபேஷ் உட்பட மூவர், 7.16 லட்சம் ரூபாய் தவறாக பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர்களிடம் பணம் வசூலிக்க ஆலோசிக்கப்படுகிறது. விஸ்வநாத்: போலீஸ்துறையில், பொருளாதார குற்றங்கள் அதிகரிக்கிறது. வசூலிக்கும் அபராத தொகையை அரசிடம் ஒப்படைப்பதில்லை. மைசூரிலுள்ள போலீஸ் பவனில் ஆண்டு தோறும் 2 கோடி ரூபாய் வருவாய் வருகிறது. இத்தொகை அரசிடம் சேருவதில்லை. போலீஸ் பவன் தலைவராக கெம்பய்யா நீடிக்கிறார். அமைச்சர்: போலீஸ் துறையில் நடக்கும் நிதி முறைகேடுகளை சகிக்க முடியாது. யார் தவறு செய்தாலும், சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X