லாரி சர்வீஸ் குடோனில், பட்டாசு மற்றும் மர்ம பொருள் வெடித்து, தமிழர் உட்பட இருவர் பலி

Added : செப் 24, 2021
Share
Advertisement
பெங்களூரு-பெங்களூரு, சாம்ராஜ்பேட்டை டி.சி.எம்., ராயன் சதுக்கம் அருகில், நியூ தரகுபேட்டையில் உள்ள லாரி சர்வீஸ் குடோனில், பட்டாசு மற்றும் மர்ம பொருள் வெடித்து, தமிழர் உட்பட இருவர் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பெங்களூரு சாம்ராஜ்பேட்டை டி.சி.எம்.ராயன் சதுக்கம் அருகில், நியூ தரகுபேட்டையில் ஸ்ரீபத்ரகாளி அம்மன் லாரி சர்வீஸ் என்ற நிறுவனத்தின் குடோன் உள்ளது. சிட்டி

பெங்களூரு-பெங்களூரு, சாம்ராஜ்பேட்டை டி.சி.எம்., ராயன் சதுக்கம் அருகில், நியூ தரகுபேட்டையில் உள்ள லாரி சர்வீஸ் குடோனில், பட்டாசு மற்றும் மர்ம பொருள் வெடித்து, தமிழர் உட்பட இருவர் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பெங்களூரு சாம்ராஜ்பேட்டை டி.சி.எம்.ராயன் சதுக்கம் அருகில், நியூ தரகுபேட்டையில் ஸ்ரீபத்ரகாளி அம்மன் லாரி சர்வீஸ் என்ற நிறுவனத்தின் குடோன் உள்ளது. சிட்டி மார்க்கெட் அருகில் இருப்பதால் மக்கள் அதிகமாக வந்து செல்வர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.இந்த குடோனுக்கு, நேற்று மதியம் 12:15 மணியிலிருந்து 12:30 மணிக்குள், 80 பட்டாசு பெட்டிகளை ஏற்றிக் கொண்டு 'டாடா ஏஸ்' வாகனம் வந்தது.மர்ம பொருள் வெடிப்புஅனைத்து பெட்டிகளும் குடோனுக்குள் இறக்கி வைக்கப்பட்டன. சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது. நுழைவு பகுதியில் இருந்த இரண்டு பட்டாசு பெட்டிகளும் வெடித்தன.அப்போது குடோனில் இருந்த இரண்டு நபர்கள் 20 மீட்டர் துாரத்துக்கு துாக்கி வீசப்பட்டனர். எதிரே இருந்த காம்பவுண்ட் சுவர் மீது சிலர் துாக்கி வீசப்பட்டனர். இதில் இருவர், கை, கால், தலை என உடல் சிதறி இறந்தனர். ஐந்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.பயங்கர வெடி விபத்தில், கடை முன் நிறுத்தப்பட்டிருந்த ௧௦க்கும் அதிகமான பைக்குகள், டாடா ஏஸ் வாகனம் போன்றவை சேதமடைந்தன. அரை கி.மீ., துாரத்தில் இருந்த கட்டடங்களில் கதவு, ஜன்னல்களின் கண்ணாடிகள் உடைந்தன.தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். பெங்களூரு வடக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ஹரிஷ் பாண்டே, சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாயுடன் வந்து, குடோன் சுற்றுப்புறங்களில் ஆய்வு நடத்தினர். தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் வந்து வெடிப் பொருட்களின் துகள்களை சேகரித்தனர். தணியாத பதற்றம்சுவர், ஷெட்டர் ஆகியவை மீது பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். சம்பவம் நடந்த பகுதி பதற்றமாகவே காணப்பட்டது. இறந்தவர்களின் உடல்கள், பிரேத பரிசோதனைக்காக, அருகில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. காயமடைந்தவர்களுக்கும் அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இறந்தவர்களின் உடல்கள் சிதறியதால், அவர்களின் உறவினர்கள் அடையாளம் கண்டுபிடித்து உறுதி செய்தனர். அதன்படி, டாடா ஏஸ் ஓட்டுனரான, தமிழகத்தின் திருகோவிலுாரைச் சேர்ந்த மனோகர், 40, சம்பவம் நடந்த பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வந்த அஸ்லாம் பாஷா, 45, இறந்தது உறுதியானது.மனோகரின் உடல் சொந்த ஊருக்கும், அஸ்லாம் பாஷா உடல் பழையகுட்டதஹள்ளியில் உள்ள மயானத்துக்கும் கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டது.மேலும், மஞ்சுநாத், ஜேம்ஸ், கணபதி, ரங்கசாமி உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். இவர்களில், ரங்கசாமியின் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.மர்ம பொருள் வெடிப்பு டி.சி.பி., ஹரிஷ் பாண்டே கூறுகையில், ''பட்டாசும் வெடித்துள்ளது. ஆனால், ரசாயனம் கலந்த மர்ம பொருளும் வெடித்திருக்க வாய்ப்புள்ளதால், தடயவியல் ஆய்வுக்கு பின்னரே காரணம் தெரியும். சிலிண்டர் வெடித்திருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. பல பெட்டிகளில் இருந்த பட்டாசுகளும் வெடிக்கவில்லை,'' என்றார்.இரண்டு நாட்களுக்கு முன், பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு தாய், மகள் இறந்த சோக சம்பவம் மறைவதற்கு முன், இங்கு நடந்த பயங்கர வெடி விபத்தில் இருவர் இறந்திருப்பது பெங்களூரு மக்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.குடோன் உரிமையாளர் கைதுகுடோனில் பட்டாசு வைப்பதற்கு, தீயணைப்புத் துறை, பெங்களூரு மாநகராட்சியிடம் அனுமதி பெறவில்லை. இதனால், குடோன் உரிமையாளர் பாபு, 52, என்பவரை வி.வி.புரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரிக்கப்படுகிறது....புல் அவுட்...இருவர் இறந்துள்ளனர். ஐவர் காயமடைந்துள்ளனர். குடோன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். முழு விசாரணைக்கு பின், வெடி விபத்துக்கான காரணம் தெரியும். எனக்கே தனி அறிக்கை அனுப்பும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.அரக ஞானேந்திரா, அமைச்சர், உள்துறை...புல் அவுட்...என் சொந்த பணத்திலிருந்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். சிகிச்சை செலவை நானே ஏற்றுக் கொள்கிறேன்.ஜமிர் அகமது கான், தொகுதி எம்.எல்.ஏ., காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X