தமிழ்நாடு

பெரும்பாக்கத்தில் 1.5 கி.மீ., சாலை இணைக்கப்படுவது எப்போது?

Added : செப் 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
-பெரும்பாக்கம், செம்மஞ்சேரி பகுதியை மையப்படுத்தி, ஒரு லட்சத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர், மேடவாக்கம் செல்ல, 12 கி.மீ., சுற்ற வேண்டி உள்ளது.துரித பயணமாக செல்ல அமைக்கப்பட்ட நுாறடி சாலையை 1.5 கி.மீ., இணைக்க, அரசு சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.பயண நேரமும் அதிகம்பெரும்பாக்கம்
 பெரும்பாக்கத்தில் 1.5 கி.மீ., சாலை இணைக்கப்படுவது எப்போது?

-பெரும்பாக்கம், செம்மஞ்சேரி பகுதியை மையப்படுத்தி, ஒரு லட்சத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.

இங்குள்ள, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர், மேடவாக்கம் செல்ல, 12 கி.மீ., சுற்ற வேண்டி உள்ளது.துரித பயணமாக செல்ல அமைக்கப்பட்ட நுாறடி சாலையை 1.5 கி.மீ., இணைக்க, அரசு சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.பயண நேரமும் அதிகம்பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, 200 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு, 1,800 கோடி ரூபாயில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது.

தற்போது, 20 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. இதில், 2015ம் ஆண்டு முதல், 18 ஆயிரம் வீடுகளில், மறுகுடியமர்வு செய்யப்பட்டு உள்ளது.இதே வளாகத்தில், எட்டு அரசு பள்ளிகள், ஒரு கலைக்கல்லுாரி, ஐ.டி.ஐ., போன்றவை புதிதாக துவங்கப்பட்டு உள்ளன. இந்த குடியிருப்பு அருகில், பிரமாண்டமான தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.மேலும், 40க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான, அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதியை மையப்படுத்தி, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்கு வசிப்போர், மேடவாக்கத்திற்கு, ஓ.எம்.ஆர்., சோழிங்கநல்லுார் சிக்னல் வழியாக, 12 கி.மீ., சுற்றி செல்ல வேண்டும். நெரிசல் காரணமாக, பயண நேரமும் அதிகம்.பொலினினி தனியார் குடியிருப்பு வழியாக சென்றால், 8 கி.மீ., பயணிக்க வேண்டும். இங்கு, சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. இங்குள்ள மக்கள் துரித பயணமாக, மேடவாக்கம் செல்ல, நுாக்கம்பாளையம் சாலையை, சோழிங்கநல்லுார் - மேடவாக்கம் பிரதான சாலையுடன் இணைக்க, 3 கி.மீ., நீளம், 100 அடி அகலம் கொண்ட இணைப்பு சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.இதற்காக, நுாக்கம்பாளையம் சாலையில் இருந்து, குடிசை மாற்று வாரிய குடியிருப்பை ஒட்டி, 6 கோடி ரூபாயில் 1.5 கி.மீ., நீளத்தில் நுாறடி அகல சாலையை, 2016ம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் அமைத்தது.சிறப்பு கவனம்மீதமுள்ள, 1.5 கி.மீ., நீள சாலை அமையும் இடம் சதுப்பு நிலமாக உள்ளது. அதில், நீரோட்டத்திற்கு தடையில்லாமல், தரைப்பாலம் அமைப்பில் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.ஐந்து ஆண்டுகள் ஆகியும், 1.5 கி.மீ., சாலையை இணைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி துவங்க உள்ள நிலையில், ஓ.எம்.ஆரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.எனவே விடுபட்ட இந்த சாலை பணிகளை துவங்கி, 1.5 கி.மீ., துாரத்தை இணைத்தால், ஓ.எம்.ஆரில் நெரிசல் கணிசமாக குறையும். விடுபட்ட 1.5 கி.மீ., சாலையை இணைக்க, அரசு சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவசர தேவைக்கு கூட, துரிதமாக செல்ல சாலை வசதி இல்லை. அதிகாரிகள், வானுயர கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கும் வேகத்தை, சாலை கட்டமைப்பு வசதி செய்ய காட்டுவதில்லை. புதிதாக அமைத்த சாலையை இணைத்தால், போக்குவரத்து நெரிசலில் மூச்சுத்திணற வேண்டியதில்லை. எரிபொருள், நேரம் மிச்சமாகும்; அலைச்சல் குறையும். தலைமைச் செயலர் தலையிட்டு, 1.5 கி.மீ., சாலையை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் குடியிருப்பு வாசிகள்பெரும்பாக்கத்தின் வளர்ச்சியை கணக்கில் கொண்டு, புதிய சாலை அமைக்க திட்டமிட்டு, 1.5 கி.மீ, நுாறடி சாலை அமைத்தோம். அதை, பெரும்பாக்கம் ஊராட்சி வசம் ஒப்படைத்து விட்டோம். மீதமுள்ள 1.5 கி.மீ., சாலையை இணைக்க, பெரிய அளவில் நிதி ஒதுக்க வேண்டும். இதற்கு, ஊராட்சி நிர்வாகம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. உயர் அதிகாரிகள் தலையிட்டால் மட்டுமே, சாலையை இணைக்க வாய்ப்புள்ளது.குடிசை மாற்று வாரிய அதிகாரிகள்
- -நமது நிருபர்- .

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
24-செப்-202117:02:43 IST Report Abuse
Vittalanand அன்புமமணியை கேளுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X