ரூ.23 கோடி மதிப்பு கோவில் நிலம் மீட்பு: தீக்குளிக்க முயன்ற ஆக்கிரமிப்பாளர்களால் பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.23 கோடி மதிப்பு கோவில் நிலம் மீட்பு: தீக்குளிக்க முயன்ற ஆக்கிரமிப்பாளர்களால் பரபரப்பு

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (6)
Share
மதுரவாயல்: மதுரவாயல் மார்க்க சகாய ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 23 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆக்கிரமிப்பாளர்கள் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மதுரவாயல் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பல்கலை அருகே, மதுரவாயல் மார்க்க சகாய ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 23 கோடி
 ரூ.23 கோடி மதிப்பு கோவில் நிலம் மீட்பு: தீக்குளிக்க முயன்ற ஆக்கிரமிப்பாளர்களால் பரபரப்பு

மதுரவாயல்: மதுரவாயல் மார்க்க சகாய ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 23 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆக்கிரமிப்பாளர்கள் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரவாயல் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பல்கலை அருகே, மதுரவாயல் மார்க்க சகாய ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 23 கோடி ரூபாய் மதிப்பிலான, 12,222 சதுர அடி பரப்பு நிலத்தில், ஒன்பது ஆக்கிரமிப்பு கட்டடங்களில் 23 கடைகள் கட்டப்பட்டிருந்தன. பரபரப்புஇதற்கு முறையாக கட்டணம் ஏதும் செலுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி கமிஷனர் கவெனிதா தலைமையில், நிர்வாக அலுவலர் பாண்டிய ராஜன் மற்றும் ஊழியர்கள், ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த ஜே.சி.பி.,யுடன் சென்றனர்.100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடைகளை இடிக்க ஆக்கிரமிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இரண்டு பெண்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். மேலும், ஒரு பெண் மாடியில் இருந்தபடி, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது மண்ணெண்ணெய் ஊற்றி மிரட்டல் விடுத்தார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் 23 கடைகளுக்கும் அறநிலையத் துறை அதிகாரிகள், 'சீல்' வைத்து சென்றனர்.


ஆக்கிரமிப்பு

இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:மதுரவாயல் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மார்க்க சகாய ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 8.5 ஏக்கர் நிலத்தில், 350க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளன.இவர்கள், பல ஆண்டுகளாக கடைகளை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டியுள்ளனர். ஆனால், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு எந்த வரியும் கட்டவில்லை.மாநகராட்சி மற்றும் மின் வாரியத் துறை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு சட்டவிரோதமாக அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.முதற்கட்டமாக 23 கடைகளுக்கு, சீல் வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் முழுமையாக விரைவில் மீட்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X