பொது செய்தி

தமிழ்நாடு

ரோவர் கருவி மூலம் கோயில் நிலம் அளவீடு: 160 கோவில் நிலங்களை தேடுது அறநிலையத்துறை

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சிவகங்கை: சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்டு மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 160 கோயில் நிலங்களை ரோவர் கருவி மூலம் இந்து அறநிலைய துறையினர் சர்வே செய்து வருகின்றனர்.இந்நான்கு மாவட்டத்தில் தேவஸ்தானத்திற்கு உட்பட்டு 160 கோயில்கள் உள்ளன. இவற்றிற்கு சொந்தமான நிலங்கள் குறித்த விபரங்களை அறநிலையத்துறையினர் சேகரித்து வருகின்றனர். அந்த வகையில்
ரோவர் கருவி மூலம் கோயில் நிலம் அளவீடு: 160 கோவில் நிலங்களை தேடுது அறநிலையத்துறை

சிவகங்கை: சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்டு மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 160 கோயில் நிலங்களை ரோவர் கருவி மூலம் இந்து அறநிலைய துறையினர் சர்வே செய்து வருகின்றனர்.



இந்நான்கு மாவட்டத்தில் தேவஸ்தானத்திற்கு உட்பட்டு 160 கோயில்கள் உள்ளன. இவற்றிற்கு சொந்தமான நிலங்கள் குறித்த விபரங்களை அறநிலையத்துறையினர் சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் சிவகங்கை அறநிலைய இணை கமிஷனர் தனபால் தலைமையில் குழுவிற்கு 3 நபர்கள் வீதம் 3 குழுவினர் இந்நான்கு மாவட்டத்தில் உள்ள 160 கோயில் நிலங்களின் விபரங்களை 'ரோவர் கருவி' மூலம் சேகரிக்க தொடங்கியுள்ளனர்.

இக்கருவி செயற்கை கோள் மூலம் நிலங்களை துல்லியமாக அளவீடு செய்து தருகிறது. நேற்று முதற்கட்டமான கோவானுார், மேலவாணியங்குடி, உடைகுளம், சோழபுரம், நாலுகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கோயில் நிலங்களை ஆய்வு செய்தனர். நேற்று மட்டும் 32 ஏக்கர் நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து 4 மாவட்டங்களிலும் 9 சர்வேயர்கள் அடங்கிய இக்குழுவினர் கோயில் நிலங்கள் பற்றிய விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
24-செப்-202117:42:05 IST Report Abuse
jayvee மேற்குமாம்பலம் பெருமாள் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில், மேற்கு சைதாப்பேட்டை காரணீஸ்வரர் மற்றும் பிரசன்ன வெங்கேடச பெருமாள் கோயில், மற்றோரு மேற்குமாம்பலம் பிரசன்ன வெங்கடேஸ்வரா கோயில், திருவனிமியூர் மருந்தீஸ்வரர் கோயில் இவைகளுக்கு சொந்தமான இன்றைய நிலையில் பல கோடிகணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள நிலங்கள், தனியார் வசம் சிக்கி, அவர்களின் பெயரில் மாற்றப்பட்டு, முந்தைய திமுக மாறும் அதிமுக அரசின் அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X