பொது செய்தி

தமிழ்நாடு

12 ராசிகளுக்கான வாரபலனும் பரிகாரமும்

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வெள்ளி முதல் வியாழன் வரை (24.9.2021 - 30.9.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம்சுக்கிரன், புதன், செவ்வாய் சாதகமாக உலவுகின்றனர். ராமர் வழிபாடு நலம் அளிக்கும்.அசுவினி: பழைய கவலை தீரும். புது வேலை பற்றி நல்ல தகவல் வரும். உறவினர் உதவியுடன் முயற்சி ஒன்று துவங்கும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
Horoscope, Weekly Horoscope, Zodiac, வாரபலன், ராசிபலன், பரிகாரம், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

வெள்ளி முதல் வியாழன் வரை (24.9.2021 - 30.9.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்


சுக்கிரன், புதன், செவ்வாய் சாதகமாக உலவுகின்றனர். ராமர் வழிபாடு நலம் அளிக்கும்.
அசுவினி: பழைய கவலை தீரும். புது வேலை பற்றி நல்ல தகவல் வரும். உறவினர் உதவியுடன் முயற்சி ஒன்று துவங்கும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எதிரிகள் காணாமல் போவர்.
பரணி: தெய்வீக தரிசனம் கிடைக்கும். நல்ல தகவல்கள் வரும். வியாபாரத்தில் பிரச்னை தீரும். வெற்றிக்குப் போராட வேண்டியிருக்கும். அரசு வகையில் உதவி கிடைக்கும்.
கார்த்திகை 1ம் பாதம்: பயம் வந்து நீங்கும். விடாமுயற்சியால் எதிலும் ஜெயிப்பீர்கள். சொத்து பற்றிய கவலை தீரும். பேச்சில் கவனமாக இருந்து சிக்கலை தவிர்ப்பீர்கள்.


ரிஷபம்


latest tamil news


புதன், சூரியன், சந்திரனால் அருமையான பலன்கள் உண்டு. மகாலட்சுமி வழிபாடு தைரியம் வளர்க்கும்.
கார்த்திகை 2,3,4: எதிர்பார்த்த தகவல் வரும். பிரச்னை கட்டுக்குள் இருக்கும். வெளிநாட்டு முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.
ரோகிணி: பணியாளர்கள் மனதில் மகிழ்ச்சி நிலவும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்வு கிடைக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கல் லாபம் தரும்.
மிருகசீரிடம் 1,2: பேச்சால் நன்மை விளையும். அலைச்சலால் களைப்புக்கு ஆளாகலாம். கடந்த கால முயற்சி தற்போது வெற்றி பெறும். அதிர்ஷ்ட வாய்ப்பு கூடிவரும்


மிதுனம்


ராகு, கேது, புதன், சுக்கிரன் நன்மையளி்பபர். குரு வழிபாடு நன்மை தரும்.
மிருகசீரிடம் 3, 4: வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனம் தேவை. மற்றவர்கள் மதிக்குமாறு நடப்பது அவசியம். முன்யோசனையுடன் செயல்படுங்கள். தீயவரிடமிருந்து விலகி இருங்கள்.
திருவாதிரை: சிறு சங்கடங்கள் வந்து மறையும். தேவையற்ற வீண் பேச்சை தவிர்க்கவும். பிள்ளைகளின் செயல்பாடு ஆறுதல் அளிக்கும்.
புனர்பூசம் 1,2,3: சலிப்பான நிலை மாறி, கலகலப்பான நிலை உருவாகும். நற்செய்திகள் வந்து சேரும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவர். உடல்நலக்குறைவு ஏற்படலாம்.


கடகம்


குரு, சுக்கிரன், சந்திரன், ராகு சாதகபலன் தருவர்.விநாயகர் வழிபாடு துன்பம் போக்கும்.
புனர்பூசம் 4: சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்களா என்பது சந்தேகம்தான். வழக்குகள் வரலாம். எதையும் யோசித்துச் செயல்படுத்துங்கள். பொறுமை மிக அவசியம்.
பூசம்: மற்றவர்கள் மத்தியில் மதிப்பு உயரும். குடும்பத்தினரின் தேவை பூர்த்தியாகும். சாப்பாட்டு விஷயத்தில் கவனம் தேவை. விடாமுயற்சியால் பலன் கிடைக்கும் யாரையும் விமர்சிக்காதீர்கள்.
ஆயில்யம்: நண்பர்களிடம் மனதை திறக்க வேண்டாம். அக்கம்பக்கத்தினரிடம் வாக்குவாதம் தவிர்க்கவும். நன்மையானாலும் தீமையானாலும் செய்தது உங்களுக்கே திரும்பும்.


சிம்மம்


latest tamil news


சனி, ராகு, புதன், அதிர்ஷ்ட பலன்களை தருவர்.நாராயணன் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
மகம்: தொழில் முயற்சி வெற்றியடையும். பணியில் அதிக கவனம் தேவை. வழக்குகளில் தீர்வு தாமதமாகும். வியாபாரிகள் தடைக்குப்பின் நன்மை அடைவர்.
பூரம்: சிறிய விஷயங்களைப் பெரிதுபடுத்த வேண்டாம். மற்றவர் கோபத்திற்கு ஆளாகலாம். நீண்ட நாள் கழித்துச் சந்தித்தவர்களை சங்கடப்படுத்தாமல் கவனமாக இருங்கள்.
உத்திரம் 1: கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபடுவீர்கள். வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். சோர்வுக்கும் சோம்பலுக்கும் இடம் தராதீர். காணாமல் போன பொருட்கள் கிடைக்கும்


கன்னி


குரு, சுக்கிரன் கேது, புதன் அனுகூலமாக உள்ளனர்.முருகன் வழிபாடு வளம் தரும்.
உத்திரம் 2, 3, 4: பணியாளர்கள் திட்டமிட்டு பணிகளை நிறைவேற்றுவர். நல்ல செய்திகள் வரும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
அஸ்தம்: தாயாருக்கு உங்களாலும் உங்களுக்கு அவராலும் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் உதவுவர். மனதிலிருப்பதை வெளிப்படுத்தும் முன் யோசித்துப் பேசுங்கள்.
சித்திரை 1, 2: உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபடுவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள்.
சந்திராஷ்டமம்: 24.9.2021 காலை 6:00 மணி - 25.9.2021 மாலை 6:59 மணி


துலாம்


சுக்கிரன், செவ்வாய், குரு கூடுதல் நன்மை தருவர்அனுமன் வழிபாடு சுபிட்சம் அளிக்கும்.
சித்திரை 3, 4: கடமையில் இருந்த தொய்வு அகலும். விலகி இருந்த உறவினர்கள் சேர வாய்ப்பு உண்டு. வீடு வாங்கும் எண்ணம் நிறைவேற ஆரம்பிக்கும்.
சுவாதி: தெய்வ பலம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வருமானம் திருப்தி தரும். இளைய சகோதரர் / சகோதரி உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பர். கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.
விசாகம் 1, 2, 3: மனக்குழப்பம் அகலும். பணவரவு திருப்தி தரும். குடும்ப பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். செயல்களில் கவனமாயிருங்கள்.
சந்திராஷ்டமம்: 25.9.2021 இரவு 7:00 மணி - 28.9.2021 காலை 6:42 மணி


விருச்சிகம்


சூரியன், செவ்வாய், புதன் அற்புதப் பலன்களைத் தருவர். துர்க்கை வழிபாடு வளம் தரும்.
விசாகம் 4: புதிய வாய்ப்பு தேடி வரும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. இடம் விட்டு இடம் மாற வாய்ப்புண்டு.
அனுஷம்: கல்யாண முயற்சி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். நண்பர்களால் நன்மை கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.
கேட்டை: மனதில் நிம்மதி நிலைக்கும். திறமை வெளிப்படும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய பொருள் வாங்க நினைததுத் தள்ளிப்போகும்
சந்திராஷ்டமம்: 28.9.2021 காலை 6:43 மணி - 30.9.2021 மாலை 5:42 மணி


தனுசு


சந்திரன், சுக்கிரன், ராகு, கேது அமோக நற்பலன் அளிப்பர். சனீஸ்வரர் வழிபாடு நலம் தரும்.
மூலம்: திட்டங்கள் தீட்டி பிறரின் பாராட்டைப் பெறுவீர்கள். மற்றவர் வார்த்தையால் மனம் புண்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது.
பூராடம்: பொறாமை காரணமாகச் சிக்கல் உண்டாகலாம். மற்றவர் பிரச்னை தீர முயற்சிகள் எடுப்பீர்கள். தடைகள் நீங்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் நம்பிக்கையைப் பெறுவர்.
உத்திராடம் 1: தொழில் செய்பவர்களுக்கு நம்பிக்கை கூடும். பெண்களுக்கு மகிழ்ச்சியான சூழல் அமையும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்படலாம். தந்தையின் உடல்நிலை தேறும்.


மகரம்


சுக்கிரன், கேது, சந்திரனால் நன்மை கிடைக்கும். நரசிம்மர் வழிபாடு நலம் தரும்.
உத்திராடம் 2, 3, 4: முயற்சி வெற்றி அடையும். எதிர்பார்த்த இனிய தகவல் வரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை மறையும்
திருவோணம்: பணப்பற்றாக்குறை ஏற்பட்டுச் சரியாகும். பிரச்னைகளைத் திறம்பட எதிர்கொள்வீர்கள். பொறாமைப்பட்டவர்கள் தோற்று ஓடுவர். உடல்நிலையில் பிரச்னை வந்து நீங்கும்.
அவிட்டம் 1, 2: வேலைப்பளு ஏற்பட்டாலும் சமாளிப்பீர்கள். பெண்கள் திறமை காரணமாக நற்பெயர் பெறுவர். எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும். இளைஞர்களுக்குப் புத்துணர்ச்சி பெருகும்.


கும்பம்


புதன், சுக்கிரன், சந்திரனால் அபரிமித நன்மை கிடைக்கும் அம்பிகை வழிபாடு சுபிட்சம் தரும்.
அவிட்டம் 3, 4: குடும்பத்தில் சுபவிஷயங்கள் நிகழும். தந்தையாலும், வாழ்க்கைத் துணைவராலும் நலம் உண்டாகும். நண்பர்களுடன் ஒற்றுமை மேலோங்கும். வெளிநாட்டில் பணிபுரிவர்கள் முன்னேற்றமடைவர்.
சதயம்: உங்களால் மற்றவர்கள் நிம்மதி காண்பர். சுப நிகழ்ச்சிகள் தள்ளிப்போகக்கூடும். விசா தொடர்பான நல்ல செய்தி வரும். உடல்நிலை நன்றாக இருக்கும். பெண்களுக்கு பயம் தீரும்.
பூரட்டாதி 1, 2, 3: நல்லவர்களின் சேர்க்கை உண்டாகும். பொறுமைக்குப் பரிசு உண்டு. கலைஞர்களின் எண்ணம் வெற்றி பெறும். தாமதித்த பணிகள் முடியும். சக பணியாளர்களின் தொல்லை தீரும்


மீனம்


குரு, புதன், சனி அதிர்ஷ்ட பலன் வழங்குவர். மகாலட்சுமி வழிபாடு வினை தீர்க்கும்.
பூரட்டாதி 4: நிம்மதி கிடைக்கும். சுபவிஷயத்தில் இருந்த தடைகள் நீங்கும். தன்னம்பிக்கை கூடுதலாகும். பணவரவு அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: முன்னேற்றம் காண்பீர்கள். பணியாளர்கள் உற்சாகமுடன் பணியாற்றுவர். வெளிநாட்டு வாய்ப்பு தள்ளிப்போகக் கூடும். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.
ரேவதி: வீண் சிந்தனை, குழப்பங்கள் ஏற்படும். பணப்பிரச்னை கட்டுக்குள் இருக்கும். வெளிநாட்டு முயற்சியில் முன்னேற்றம் இருக்கும். மகான்கள் தரிசனம் கிடைக்கும். திருமணம் கைகூடி வரும்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
abibabegum - madurai- Anna nagar,இந்தியா
24-செப்-202110:06:27 IST Report Abuse
abibabegum சூப்பர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X