நல்லவேளை உங்கள் தந்தை போல இன்னொரு மதத்திற்கு பல்லக்கு தூக்காமல் இருக்கிறீர்களே...

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
துரை வையாபுரி என்ற என் பெயர் முடிந்து விட்டது; துரை வைகோ தான் இனிமேல் என் பெயர். நான் பெருமாளை வணங்குபவன். என்னிடம் பெருமாளும் உண்டு; ஈ.வெ.ரா.,வும் உண்டு.- ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ மகன் துரை வைகோ'நல்லவேளை உங்கள் தந்தை போல, ஹிந்து மத நுால்கள், தமிழ் பக்தி இலக்கியங்களை கரைத்து குடித்து விட்டு, இன்னொரு மதத்திற்கு பல்லக்கு துாக்காமல் இருக்கிறீர்களே... அதற்கு
நல்லவேளை உங்கள் தந்தை போல இன்னொரு மதத்திற்கு பல்லக்கு தூக்காமல் இருக்கிறீர்களே...

துரை வையாபுரி என்ற என் பெயர் முடிந்து விட்டது; துரை வைகோ தான் இனிமேல் என் பெயர். நான் பெருமாளை வணங்குபவன். என்னிடம் பெருமாளும் உண்டு; ஈ.வெ.ரா.,வும் உண்டு.
- ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ மகன் துரை வைகோ


'நல்லவேளை உங்கள் தந்தை போல, ஹிந்து மத நுால்கள், தமிழ் பக்தி இலக்கியங்களை கரைத்து குடித்து விட்டு, இன்னொரு மதத்திற்கு பல்லக்கு துாக்காமல் இருக்கிறீர்களே... அதற்கு பாராட்டுகள்...' என, சொல்லத் துாண்டும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ மகன் துரை வைகோ பேச்சு.



புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தற்போதுள்ள பொருளாதார மந்த நிலையில், நிறுவனங்கள் சந்திக்கும் சிக்கல்களை, போக்கும் விதத்தில் அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
- தமிழக காங்., துணைத் தலைவர் வாழப்பாடி ராம சுகந்தன்


'இருக்கும் உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களை பாதுகாத்தாலே போதும், புதிய முதலீடு ஈர்ப்பது எல்லாம் அரசியல் நடவடிக்கை ஆகி விட்டது...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக காங்., துணைத் தலைவர் வாழப்பாடி ராம சுகந்தன் அறிக்கை.



ஐதராபாத் முஸ்லிம் எம்.பி., ஒவாய்சியின் வீட்டை, 'ஹிந்து சேனா' என்ற அமைப்பினர் அடித்து நொறுக்குவது போல, 'டிவி'களில் காட்டுகின்றனர் இதுபோலத் தான், '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் நான் வென்றதும், காங்., பொதுச் செயலர் பிரியங்காவின் குண்டர்கள், டில்லியில் என் வீட்டை தாக்கினர். அதை எந்த 'டிவி'களும் காட்டவில்லை.
- பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி


latest tamil news




'காட்டக் கூடாது என, அந்த, 'டிவி'களுக்கு மேலிட உத்தரவு வந்திருக்கும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி அறிக்கை.



'நீட்' தேர்வு பற்றிய நீதிஅரசர் ராஜன் கமிட்டி அறிக்கை, 'நீட் தேர்வு வேண்டும்' என்று கேட்கும் மனசாட்சி அற்றவர்களுக்கு மரண அடி கொடுத்துள்ளது. ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி, பணக்காரர்களை, நீட் கொழுக்க வைத்ததை நிரூபிக்கும் சான்றாவணம் அது!
- தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்


'சரி, அந்த அறிக்கை தமிழில் இல்லையாமே; தமிழக அரசுக்கு துதி பாடும் உங்களுக்கு அது கஷ்டமாக இல்லையா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.



பா.ஜ.,வுடன் கூட்டு வைத்தால் என்ன கதி ஆகும் என்பது புதுச்சேரியிலும் தெரிகிறது. முதல்வர் ரெங்கசாமியை மிரட்டி ராஜ்யசபா எம்.பி., சீட்டை பெற்று விட்டது பா.ஜ.,
- தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்


'இதில் ஏன் கம்யூனிஸ்ட்டுகளுக்கு கவலை... தி.மு.க., கொடுத்த பணத்தை வைத்து கொண்டு, அக்கட்சிக்கு துதி பாடிக் கொண்டிருக்க வேண்டியது தானே...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை.

Advertisement


வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,சவுதி அரேபியா
27-செப்-202115:54:33 IST Report Abuse
Hari வையாபுரி சொல்லவருவது என் அப்பா ஒரு சிலுவை நான் அங்கி மேல கருப்பு துண்டு போடாதா பாதிரின்னு சொல்லவர்றாரா.
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
27-செப்-202115:49:11 IST Report Abuse
Hari வையாபுரி என்றாலும் வையாத பூரி என்றாலும் ,ஒரே குட்டைல உரிய மட்டைதானே
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
27-செப்-202107:23:23 IST Report Abuse
Milirvan //நீதிஅரசர் ராஜன் கமிட்டி அறிக்கை// நீதிபதி பெண்ணாக இருந்தால் நீதிராணி'ன்னு சொல்லுவீங்களா? .. அப்போ கட்சித்தலைவர்.. கட்சியரசர்.. பயங்கரவாத தலைவர் பயங்கரஅரசர்.. குடியாட்சித்தலைவர் குடியரசர்.. இப்புடி அரசரை தல மேல வச்சுக்கற நாம்போ மக்களாட்சி.. ரொம்போ பீட்டர் வுடுறாருப்பா.. ஹீ..ஹீ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X