இனி 'காப்பி' அடிக்காதீர்கள்: வழக்கறிஞருக்கு டில்லி உயர்நீதிமன்றம் அறிவுரை

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: டில்லி போலீஸ் கமிஷனராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதை எதிர்க்கும் வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், 'உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் மனுவை அப்படியே முழுமையாக 'காப்பி' அடித்துள்ளீர்கள். 'இனி இது போல செய்யக் கூடாது' என, வழக்கறிஞருக்கு அறிவுரை வழங்கியுள்ளது.பதவி ஓய்வு பெறுவதற்கு நான்கு நாட்களே இருந்த நிலையில், மூத்த ஐ.பி.எஸ்.,
Plea, Rakesh Asthana, Appointment, Delhi HC, Copied, High Court, டில்லி, உயர்நீதிமன்றம், காப்பி, அறிவுரை

புதுடில்லி: டில்லி போலீஸ் கமிஷனராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதை எதிர்க்கும் வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், 'உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் மனுவை அப்படியே முழுமையாக 'காப்பி' அடித்துள்ளீர்கள். 'இனி இது போல செய்யக் கூடாது' என, வழக்கறிஞருக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

பதவி ஓய்வு பெறுவதற்கு நான்கு நாட்களே இருந்த நிலையில், மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி ராகேஷ் அஸ்தானா, டில்லி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவரது பணிக் காலமும் நீட்டிக்கப்பட்டது. இதை எதிர்த்து டில்லியைச் சேர்ந்த சதர் அலாம் என்ற வழக்கறிஞர், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணின் அரசு சாரா அமைப்பும் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளது.


latest tamil news


உச்ச நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்த மனுவில் உள்ள வார்த்தைகளை அப்படியே 'காப்பி' செய்து, சதர் அலாம் தன் மனுவில் கூறியுள்ளதாக, பிரஷாந்த் பூஷண் நீதிமன்றத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜராகும் சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தாவும் அதை ஆமோதித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.என். படேல் தலைமையிலான டில்லி உயர் நீதிமன்ற அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.அப்போது சதர் அலாம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தன் வாதத்தை முன்வைத்தார். நீதிபதிகள் சில கேள்விகளை கேட்டனர் ஆனால் அதற்கு அவரால் பதிலளிக்க முடிய வில்லை.


latest tamil news


அப்போது நீதிபதிகள் கூறியுள்ளதாவது: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அப்படியே காப்பியடித்து இங்கு தாக்கல் செய்துள்ளீர்கள். அதில் உள்ள, 'புல் ஸ்டாப், கமா' போன்றவற்றை கூட மாற்றவில்லை. அடுத்தவர் தாக்கல் செய்த மனுவை 99 சதவீதம் காப்பியடித்து, உங்களுடைய பெயரில் மனு தாக்கல் செய்துள்ளீர்கள். வாதத்தின்போது மனுவை நீங்கள் அப்படியே படித்துள்ளீர்கள். சாதாரண கேள்விக்கு கூட உங்களுக்கு பதில் தெரியவில்லை. இனி இது போல காப்பியடிக்காதீர்கள். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-செப்-202121:14:56 IST Report Abuse
அப்புசாமி சமூக நீதி வக்கீலா இருப்பாரோ?
Rate this:
Cancel
SKANDH - Chennai,இந்தியா
24-செப்-202119:24:35 IST Report Abuse
SKANDH இந்த சுடலை அடிக்கும் காபியை எந்த நீதிபதி சொல்லுவார். எல்லா திட்டங்களும் அதிமுகவினரதே.. ஈ அடிச்சான் காப்பி அடிக்குதே சுடலை. அதையும் கேளுங்க நீதிபதி அவர்களே.
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
24-செப்-202117:31:12 IST Report Abuse
Rpalnivelu //மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணின் அரசு சாரா அமைப்பும் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளது/). பிரஷாந்த் பூஷண் ஒரு கேடு கெட்ட பொய் வேஷம் போடும் ஆசாமி
Rate this:
24-செப்-202122:44:25 IST Report Abuse
G. P. Rajagopalan Rajuஉண்மை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X