பொது செய்தி

இந்தியா

புதிய உச்சம் : சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்தது

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகின்றன. முதன்முறையாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. அதேப்போன்று தேசிய பங்குச்சந்தையின் நிப்டியும் 17,900 புள்ளிகளை கடந்துள்ளது. கொரோனா பரவல் அதிகமிருந்த நிலையிலும், இந்திய பங்குச் சந்தைகள் பாதிக்கப்படாமல், உச்சம் தொட்டபடி இருந்தன. சென்செக்ஸ் 50 ஆயிரம், 55 ஆயிரம், 58 ஆயிரம்
Sensex, Nifty, BSE, NSE, Bombaystockexchange, indiansharmarket,

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகின்றன. முதன்முறையாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. அதேப்போன்று தேசிய பங்குச்சந்தையின் நிப்டியும் 17,900 புள்ளிகளை கடந்துள்ளது.
கொரோனா பரவல் அதிகமிருந்த நிலையிலும், இந்திய பங்குச் சந்தைகள் பாதிக்கப்படாமல், உச்சம் தொட்டபடி இருந்தன. சென்செக்ஸ் 50 ஆயிரம், 55 ஆயிரம், 58 ஆயிரம் என தொடர்ந்து உயர்வை கண்டு வந்தது. அந்த வகையில், நேற்றைய வர்த்தகத்தின் இடையே, 59 ஆயிரத்து 957 புள்ளிகளை எட்டியது சென்செக்ஸ். பின், வர்த்தகத்தின் இறுதியில் 59 ஆயிரத்து, 885 புள்ளிகளுடன் புதிய உச்சத்தில் நிலை பெற்றது. தேசிய பங்குச் சந்தையின் 'நிப்டி'யும், 17 ஆயிரத்து 823 புள்ளிகளில் நிலைபெற்றது.


latest tamil news



இன்றைய வர்த்தகத்தில் நிச்சயம் சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளை எட்டும் என முதலீட்டாளர்கள் காத்திருந்தனர். அதன்படியே இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 325.71 புள்ளிகள் உயர்ந்து 60,211.07ஆகவும், நிப்டி 93.30 புள்ளிகள் உயர்ந்து 17,916.30 எனும் புதிய உச்சத்தை தொட்டது. இந்தியாவில் அடுத்தடுத்து பண்டிகை காலம் என்பதால் இப்போதே பல வர்த்தகங்கள் சூடு பிடிக்க தொடங்கி உள்ளன. அந்தவகையில் பங்குச் சந்தைகளை பொறுத்தவரை தீபாவளி கொண்டாட்டம் இப்போதே துவங்கி விட்டது எனலாம்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
usha balu - HYDERABAD,இந்தியா
24-செப்-202119:38:34 IST Report Abuse
usha balu சூப்பர்.
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
24-செப்-202117:27:40 IST Report Abuse
Rpalnivelu மகாத்மா மோடியின் ஆட்சியில் எல்லாமே சாத்தியம். போங்கய்யா வீணாய்ப்போன திருட்டு த்ரவிஷங்களை விட்டு விட்டு தொழிலில் கவனம் செலுத்துங்க.
Rate this:
Cancel
24-செப்-202112:25:51 IST Report Abuse
Ranjith Rajan V இந்த வளர்ச்சி நீர் குமிழி போன்றது. 3 மாதங்களில் பெரிய வீழ்ச்சி காத்திருக்கிறது.. உஷாரய்யா உஷாரு..
Rate this:
24-செப்-202115:03:36 IST Report Abuse
ஆரூர் ரங்இதையேதான் 24000 புள்ளிகள் இருந்த போது கூட சீனு போன்ற காங்கிரஸ் பொருளாதார மேதைகள்🥲 சொன்னாங்க. அவர்களை நம்பி விற்றுவிட்டு ஓடியவர்களுக்குத்தான் இப்போ நஷ்டம்? நம்பாதவன் விற்காத புத்திசாலி. இப்போ 60000 புள்ளிகளைப் பார்த்து வெந்து போனது😪😪 யார்? விரைவில் NSE யும் அடுத்த மைல் கல்லைத் தாண்டும். அப்போது கூட இப்படித்தான் கருத்துப் பதிவிடுவீர்களா.பார்ப்போம்...
Rate this:
சீனி - Bangalore,இந்தியா
24-செப்-202116:03:28 IST Report Abuse
சீனிஆனந்த் சீனுதான், இந்த சீனுக்கும் குரு. ஆனா அவர் பேச்சை கண்டிப்பா கேட்கமாட்டேன்.... :) ஆனா அவரிடம் பாடம் படித்து நீண்டகால முதலிட்டில் போட்ட பணம் நல்ல லாபத்தில் குந்திருக்கு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X