பொது செய்தி

தமிழ்நாடு

256 அரிவாள், கத்தி, 3 துப்பாக்கிகள் சிக்கியது; தமிழகம் முழுவதும் 560 ரவுடிகள் கைது

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
சென்னை: தமிழகம் முழுவதும் குற்றங்களை தடுக்கும் விதமாக நள்ளிரவில் ரவுடிகளின் வீடுகளில் திடீரென போலீசார் சோதனை நடத்தினர். இதில், 256 அரிவாள், கத்தி, 3 துப்பாக்கிகள் சிக்கியதுடன், 560 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். சென்னை, திருவள்ளூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தென்காசி, என பல்வேறு மாவட்டங்களில் இந்த ரெய்டு நடந்தது.தமிழகத்தில் குற்றங்களை தடுக்கும் விதமாக பல பகுதிகளில்
தமிழகம், ரவுடிகள், கைது, ஆயுதங்கள், பறிமுதல், போலீசார், ரெய்டு

சென்னை: தமிழகம் முழுவதும் குற்றங்களை தடுக்கும் விதமாக நள்ளிரவில் ரவுடிகளின் வீடுகளில் திடீரென போலீசார் சோதனை நடத்தினர். இதில், 256 அரிவாள், கத்தி, 3 துப்பாக்கிகள் சிக்கியதுடன், 560 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். சென்னை, திருவள்ளூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தென்காசி, என பல்வேறு மாவட்டங்களில் இந்த ரெய்டு நடந்தது.

தமிழகத்தில் குற்றங்களை தடுக்கும் விதமாக பல பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீட்டில் நள்ளிரவில் போலீசார் திடீரென சோதனை நடத்தினர். டிஜிபி சைலேந்திர பாபு அவர்களின் உத்தரவின் பேரில் ரவுடிகளின் அராஜகத்தை ஒடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டிஜிபி உத்தரவின்பேரில் துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா தலைமையில் நடந்த சோதனையில் ரவுடிகளின் வீட்டில் இருந்த பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


latest tamil news



இந்த சோதனையில், 256 அரிவாள், கத்தி, 3 துப்பாக்கிகள் ரவுடிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. மேலும், சுமார் 560 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். குற்றச்சம்பங்களில் ஈடுபடாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மற்ற ரவுடிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


தூத்துக்குடியில் 47 ரவுடிகள் கைது

தூத்துக்குடி எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் அனைத்து போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் இரவு முழுவதும் விடிய, விடிய தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டனர். அதில் 47 ரவுடிகள் கைது செய்யப்பட்டதுடன், 42 அரிவாள், வாள் போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பழைய வழக்குகளில் ஈடுபட்ட 103 பேர் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 107, 109 மற்றும் 110 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


3 மாவட்டங்களில் 113 ரவுடிகள் கைது

வேலுார் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் 113 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் ஹாம்பிங் ஆபரேஷன் மூலம் ரவுடிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். வேலுார் மாவட்டத்தில் 41, திருப்பத்துார், 42, ராணிப்பேட்டை 30 என மொத்தம் 113 ரவுடிகளை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கை தொடரும் என போலீசார் கூறினர். இதனால் அருகில் உள்ள ஆந்திரா மாநிலம், சித்துார், கடப்பா, திருப்பதிக்கு ரவுடிகள் தப்பியதால் அம்மாநில போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridharan - Chennai,இந்தியா
25-செப்-202106:00:44 IST Report Abuse
Sridharan " 'ஓராண்டுக்கு எவ்வித குற்றங்களிலும் ஈடுபட மாட்டோம். மீறினால், எங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம்' என, உறுதிமொழி பத்திரம் பெற்றுள்ளனர்." இது என்ன மாதிரி உறுதிமொழி பத்திரம்? ஓராண்டுக்குப் பின் குற்றங்கள் செய்யலாமா? அல்லது உறுதிமொழி பத்திரம் கொடுக்கவில்லையானால் கைது செய்யப்பட மாட்டார்களா?
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
24-செப்-202121:20:47 IST Report Abuse
SUBBU மதுரையில் நன்றாக வலை வீசி பிடித்தால் ஊர்பட்ட ரவுடிகளை அள்ளலாம்.
Rate this:
Cancel
s.sivarajan - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்
24-செப்-202117:54:22 IST Report Abuse
s.sivarajan சின்ன சின்ன ரவுடித்தனமெல்லாம் இனி செய்ய முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X