மூத்த தலைவர்களை அவமதிப்பதா? 'மாஜி' முதல்வர் அமரீந்தர் பாய்ச்சல்!

Added : செப் 24, 2021
Share
Advertisement
சண்டிகர் : ''காங்கிரசில் மூத்த தலைவர்களை அவமானப்படுத்துவதும், அசிங்கப்படுத்துவதும் சரியா?'' என, அக்கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான அமரீந்தர் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.பஞ்சாப் காங்., தலைவர் நவ்ஜோத் சிங் உடனான மோதலைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் சமீபத்தில் விலகினார்.அமரீந்தர் சிங் பேசும்போது, 'என்


சண்டிகர் : ''காங்கிரசில் மூத்த தலைவர்களை அவமானப்படுத்துவதும், அசிங்கப்படுத்துவதும் சரியா?'' என, அக்கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான அமரீந்தர் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
பஞ்சாப் காங்., தலைவர் நவ்ஜோத் சிங் உடனான மோதலைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் சமீபத்தில் விலகினார்.அமரீந்தர் சிங் பேசும்போது, 'என் குழந்தைகள் போல உள்ள ராகுல், பிரியங்கா ஆகியோர் அரசியல் அனுபவமற்றவர்கள்.அவர்கள் உடனிருப்பவர்களால் தவறாக வழி நடத்தப்படுகின்றனர்'என்றார். மேலும், 'சித்து பயங்கரமான ஆள். அவர் சூப்பர் முதல்வர் போல நடந்து கொள்கிறார். பஞ்சாப் புதிய முதல்வர் சரன்ஜித் சிங் தலையாட்டி பொம்மையாக உள்ளார்' என்றும் அமரீந்தர் குற்றஞ்சாட்டிஇருந்தார்.

இது குறித்து காங்., செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷிரிநாட்டி கூறியதாவது:
ஒன்பது ஆண்டுகள் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் பொறுப்பின்றி பேசக் கூடாது. அரசியலில் கோபம், பொறாமை, தனிப்பட்ட குரோதம், பழிவாங்கும் நடவடிக்கை ஆகியவை கூடாது. கட்சித் தலைமைக்கு கட்டுப்படாதோர் தாராளமாகவெளியேறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து அமரீந்தர் சிங் கூறியதாவது: அரசியலில் கோபம் கூடாது தான். அதேசமயம் காங்.,கில் தலைவர்களை அவமானப்படுத்த, அசிங்கப்படுத்த மட்டும் இடமுள்ளதா?இதெல்லாம் அங்கு சகஜம். என் போன்ற மூத்த தலைவர்களுக்கே இந்த கதி என்றால் சாதாரண தொண்டர்கள் நிலை எப்படியிருக்கும்!

இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X