அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேசிய மகளிர் ஆணையத்தில் வானதி சீனிவாசன் புகார்

Added : செப் 24, 2021
Share
Advertisement
கோவை : டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு, சேலையணிந்து சென்ற பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்து, தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்துள்ளார்.டில்லியில் உள்ள தனியார் நட்சத்திர உணவகத்துக்கு, புடவை அணிந்து சென்ற பெண்ணை, அனுமதிக்காத உணவக ஊழியர்கள், 'மேற்கத்திய உடையில் வந்தால் மட்டுமே

கோவை : டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு, சேலையணிந்து சென்ற பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்து, தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்துள்ளார்.
டில்லியில் உள்ள தனியார் நட்சத்திர உணவகத்துக்கு, புடவை அணிந்து சென்ற பெண்ணை, அனுமதிக்காத உணவக ஊழியர்கள், 'மேற்கத்திய உடையில் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்' என தெரிவித்துள்ளனர். இதற்கு பலதரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மாவுக்கு, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் அனுப்பியுள்ள கடிதத்தில், ''இந்தியாவில் செயல்பட்டு வரும் ஒரு ஓட்டலுக்குள், இந்திய பாரம்பரிய உடையணிந்து சென்ற பெண்ணுக்கு அனுமதி மறுத்திருக்கும் செயல், கண்டனத்துக்குரியது. ஓட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X