பெண்களின் துணிகளை 6 மாதம் துவைக்கணும்; பாலியல் வழக்கில் புதுமையான உத்தரவு வழங்கிய நீதிபதி

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
பாட்னா: பாலியல் வழக்கில் கைதான நபருக்கு ‛6 மாதம் கிராமத்தில் உள்ள பெண்களின் துணிகளை சொந்த செலவில் துவைத்து சலவை செய்ய வேண்டும்,' என்ற நிபந்தனையுடன் நீதிபதி ஜாமின் வழங்கியுள்ளார்.பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள மஜோர் கிராமத்தை சேர்ந்தவர் லாலன் குமார் (20). சலவை தொழில் செய்துவரும் இவர் மீது, அக்கிராம பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயற்சி செய்ததாக குற்றம்
Man Accused, Rape Bid, Wash Women Clothes, Ordered, Court, Six Months

பாட்னா: பாலியல் வழக்கில் கைதான நபருக்கு ‛6 மாதம் கிராமத்தில் உள்ள பெண்களின் துணிகளை சொந்த செலவில் துவைத்து சலவை செய்ய வேண்டும்,' என்ற நிபந்தனையுடன் நீதிபதி ஜாமின் வழங்கியுள்ளார்.

பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள மஜோர் கிராமத்தை சேர்ந்தவர் லாலன் குமார் (20). சலவை தொழில் செய்துவரும் இவர் மீது, அக்கிராம பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் லாலன் குமாரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். ஐந்து மாதம் சிறைவாசம் அனுபவித்த லாலன் குமார், ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அதில், பெண்கள் மீதான தனது மரியாதையை வெளிப்படுத்த, தனது தொழில் ரீதியாக பெண்களுக்கு சமூக சேவை செய்ய தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


latest tamil newsஇதனை ஏற்ற ஜஞ்சர்பூர் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அவினாஷ் குமார், ‛அடுத்த 6 மாத காலத்திற்கு மஜோர் கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களின் துணிகளையும் சொந்த செலவில் துவைத்து சலவை செய்ய வேண்டும்,' என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கினார். நீதிமன்றத்தின் இந்த நிபந்தனையால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக, அக்கிராமத் தலைவர் நசீமா கட்டூன் தெரிவித்தார். மேலும், இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என்றும், இது பெண்கள் மீதான மரியாதையை அதிகரிக்கும் என்றும் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
25-செப்-202111:38:13 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் சட்டத்தில் இப்படி ஒரு சந்து இருப்பதை வக்கீல் அவனுக்கு சொல்லிக்கொடுத்துள்ளார்
Rate this:
Cancel
Mannandhai -  ( Posted via: Dinamalar Android App )
25-செப்-202102:31:59 IST Report Abuse
Mannandhai Unable to judge who is criminal in the episode
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
24-செப்-202120:12:15 IST Report Abuse
M  Ramachandran இது யேற்புடையதல்ல. விகார மனா நிலையில் உள்ளவரிடம் இது மாறி தயாண்டானை கொடுப்பது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X