அரசியல் செய்தி

தமிழ்நாடு

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக; பழனிசாமி குற்றச்சாட்டு

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
தென்காசி: ‛‛ சட்டசபை தேர்தலின் போது 525 வாக்குறுதிகளை அளித்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் 2 அல்லது 3 வாக்குறுதிகளை தவிர மற்றவற்றை நிறைவேற்றவில்லை'' என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.தென்காசியில், அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாவது; சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், குறைந்த ஓட்டுகளில் தான் நாம் தோல்வியடைந்தோம். தென்காசி மாவட்டம்
அதிமுக, திமுக, பழனிசாமி, இபிஎஸ், எடப்பாடிபழனிசாமி, வாக்குறுதி

தென்காசி: ‛‛ சட்டசபை தேர்தலின் போது 525 வாக்குறுதிகளை அளித்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் 2 அல்லது 3 வாக்குறுதிகளை தவிர மற்றவற்றை நிறைவேற்றவில்லை'' என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தென்காசியில், அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாவது; சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், குறைந்த ஓட்டுகளில் தான் நாம் தோல்வியடைந்தோம். தென்காசி மாவட்டம் அதிமுக.,வின் கோட்டை என்பதை உள்ளாட்சி தேர்தலில் நிருபிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்பின் மூலம் தான் மக்களின் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றன. உள்ளாட்சி அமைப்புகளில் நமது வேட்பாளர்கள் வெற்றி பெற்று மக்களுக்கு நன்மை செய்து, கட்சிக்கு பலம் சேர்க்கின்றனர். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது எளிதல்ல. உள்ளூரில் செல்வாக்கு உள்ளவர்கள் தான் வெற்றி பெற வேண்டும்.


latest tamil news



தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசும் திமுக, ஆட்சிக்கு வந்ததும் அதனை நிறைவேற்றுவதில்லை. சட்டசபை தேர்தலின் போது, திமுக 525 வாக்குறுதிகளை வெளியிட்டனர். சம்பிரதாயத்திற்கு 2 அல்லது 3 வெளியிட்டனர். மற்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விவசாயிகள் நகைக்கடன் தள்ளுபடி செய்யாமல், விவசாயிகளை திமுக வஞ்சிக்கிறது. விவசாயிகளை வஞ்சீக்காதீர்கள். கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். புதிதாக கடன் வழங்க வேண்டும். அதிமுக செயல்படுத்திய திட்டங்களை தொடர திமுக.,வுக்கு மனமில்லை. நகைக்கடன் தள்ளுபடி என மக்களை ஸ்டாலின் ஏமாற்றினார். இவ்வாறு அவர் பேசினார்.


கோஷ்டி மோதல்


தென்காசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த பழனிசாமிக்கு, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடசலாபுரம் சோதனை சாவடி அருகே நான்கு வழிச்சாலையில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜவர்மன் மற்றும் ஒன்றிய செயலர் சண்முககனி ஆதரவாளர்கள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அப்போது, நகர செயலாளர் சட்டையை பிடித்து இழுத்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், அதனை சரி செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-செப்-202116:25:08 IST Report Abuse
அப்புசாமி இப்பிடியே புலம்பிக்கிட்டிருக்க வேண்டியதுதான்....
Rate this:
Cancel
24-செப்-202114:54:48 IST Report Abuse
ராமகிருஷ்ணன் விடியலை மடியல் செய்ய திமுகவின் பொய் வாக்குறுதிகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
24-செப்-202113:49:33 IST Report Abuse
sundarsvpr அழுது முரண்டு பிடிக்கும் குழந்தைகளுக்கு ஆசை காட்டி சமாளிப்பார்கள். அதனை நினைவில் வைத்துக்கொள்ளாது. அதுபோல்தான் வாக்குறுதிகள். ஏமாந்து வாக்குஅளிப்போம் மறந்துவிடுவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X