பொது செய்தி

தமிழ்நாடு

பி.ஆர்க்., கவுன்சிலிங் அக்., 26ல் துவக்கம்

Added : செப் 24, 2021
Share
Advertisement
சென்னை : 'பி.ஆர்க்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அக்டோபர், 26ம் தேதி துவங்கும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும் பி.ஆர்க்., கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு 20ம் தேதி துவங்கியது.அக்., 6ம் தேதிக்குள் விண்ணப்ப

சென்னை : 'பி.ஆர்க்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அக்டோபர், 26ம் தேதி துவங்கும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும் பி.ஆர்க்., கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு 20ம் தேதி துவங்கியது.அக்., 6ம் தேதிக்குள் விண்ணப்ப பதிவை முடிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அக்., 7ல் மாணவர்களுக்கான, 'ரேண்டம்' எண் நிர்ணயிக்கப்படும். அக்., 8 முதல், 21 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.

இதையடுத்து, அக்., 23ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். பின், அக்., 26ல் கவுன்சிலிங் துவங்கி, நவ., 2ல் முடியும். அருந்ததியர் பிரிவில் காலியிடங்களை, ஆதி திராவிடர் மாணவர்களுக்கு ஒதுக்கும் கவுன்சிலிங், நவம்பர், 9ல் நடத்தப்படும்.இந்த தகவலை தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X